மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Viral Video: லூட்டி தாத்தா செய்த மாஸ் வேலை ஒன்று வைரலாகி வருகிறது. இவர் காட்டும் ஸ்வேக் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 6, 2022, 02:23 PM IST
  • இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம்.
  • இவற்றில் வரும் வேடிக்கையான காட்சிகள் நம்மை நமது மன அழுத்தங்களையும் கவலைகளையும் மறந்து சிரிக்கை வைக்கின்றன.
  • சமீப காலங்களில் பல வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
மாஸா பீடி பிடித்து பிலிம் காட்டும் தாத்தா: வாய் பிளக்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையத்தில் நாம் பல வீடியோக்களை தினமும் காண்கிறோம். இவற்றில் வரும் வேடிக்கையான காட்சிகள் நம்மை நமது மன அழுத்தங்களையும் கவலைகளையும் மறந்து சிரிக்கை வைக்கின்றன. சமீப காலங்களில் பல வித்தியாசமான வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. இவை வெளிவந்த உடனேயே மிக வேகமாக வைரலும் ஆகின்றன. தனிபட்ட நபர்களின் பல தனித்துவமான திறமைகளும் இவற்றில் காணப்படுகின்றன. இவற்றில் நாம் காணும் பல விஷயங்கள் நம்மை ஆச்சரியப்படுத்துவதொடு அதிசயிக்க வைக்கிறன. நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து இப்படிப்பட்ட பல்வேறு வீடியோக்கள் தினமும் வெளியிடப்படுகின்றன. 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்களில், மக்கள் சாலையில் ஸ்வாக் காட்டுவதைக் காண முடியும். இப்படி ஸ்வாக் காட்டும், பந்தா காட்டும் நபர்களுக்கு வயது வரம்பே இல்லை. அனைத்து வயதினரும் இப்படிப்பட்ட செயல்களை செய்கிறார்கள். சமீபத்தில் ஒரு வயதான முதியவரின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் சாலையில் ரஜினிகாந்த் பாணியில் பீடி புகைப்பதைக் காண முடிகின்றது. 

இவரது அசாத்திய ஸ்டைலை பார்த்து சாலையில் செல்லும் மக்களும் சற்று அதிர்ந்து போகிறார்கள். அந்த அளவிற்கு இவரது ஸ்வாக் உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான உடனேயே வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | பழப்பெட்டியில் 10 அடி மலைப்பாம்பு, அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்

முதியவரின் தனித்துவமான ஸ்டைல்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு முதியவர் சாலை ஓரத்தில் நிற்பதை காண முடிகின்றது. அவர் முதலில் பீடியை பற்ற வைப்பதை பார்க்கிறோம். சிறிது நேரத்திலேயே பீடியை விழுங்கி ரஜினி ஸ்டைலில் புகை விடுகிறார். அடுத்து அவர் காட்டும் ஸ்டைல் சாலையில் அவரை பார்ப்பவர்களுக்கும் இணையத்தில் பார்க்கும் இணையவாசிகளுக்கும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. 

அசால்ட் தாத்தாவின் அசத்தல் வீடியோவை இங்கே காணலாம்:

ரசிகர்களான நெட்டிசன்கள் 

இந்த வீடியோவில், முதியவர் புகை பிடிக்கும் பாணியும், அவர் காட்டும் ஸ்டைலும் சமூக வலைதளவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வீடியோ sakhtlogg என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்த வண்ணம் உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலர் இந்த முதியவரின் ரசிகர்கள் ஆகிவிட்டார்கள். ‘என்ன ஒரு ஸ்டைல்’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். மற்றொருவர் ‘தாத்தா காட்டும் ஸ்வேக் மாஸாக உள்ளது’ என கமெண்ட் செய்துள்ளார். 

மேலும் படிக்க | சாலையில் ஆண்டிகள் ஆடிய அட்டகாசமான டான்ஸ்: பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News