SeePics: நாகர்ஜூனாவுடன் கைகோர்க்கும் நாகினி நாயகி!

தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் நாகர்ஜூனாவுடன், நாகினி நாயகி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Last Updated : Jul 17, 2018, 06:03 PM IST
SeePics: நாகர்ஜூனாவுடன் கைகோர்க்கும் நாகினி நாயகி! title=

தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் நாகர்ஜூனாவுடன், நாகினி நாயகி இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!

பிரபல இந்தி தொடரான நாகினி-யில் நடித்த மௌனி தொடர்ந்து இணையத்தில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகின்றார். அந்த வகையில் தற்போது தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா-வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வங்காள அழகியான மௌனி ராய் தொலைக்காட்சி தொடர் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி, பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தவர். சமீபத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது 'RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதற்கிடையில் தற்போது இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பட்சன், ரன்பீர் கபூர், அலியா பட், தெலுங்கு மெகா ஸ்டார் நாகர்ஜூனா நடிப்பில் உறுவாகி வரும் ப்ரிமஹஸ்த்ரா திரைப்படத்திலும் நடித்து வருகின்றார் மௌனி ராய். 

படப்பிடிப்பின் போது நாகர்ஜூனாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் மௌனி ராய். மௌனி ராயின் இந்த புகைப்படங்கள் தான் இப்போது இணைய ரசிகர்களுக்கு தீனி...

Trending News