சிறுத்தையை ஓட விட்ட குரங்கு, இது உனக்கு தேவையா: வீடியோ வைரல்

குரங்கை வேட்டையாட மரத்தில் ஏறிய சிறுத்தைக்கு பல்பு, இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 23, 2022, 11:16 AM IST
  • வெச்சி செஞ்ச குரங்கு.
  • சிறுத்தைகக்கு பல்பு.
  • வீடியோ தற்போது வைரல்.
சிறுத்தையை ஓட விட்ட குரங்கு, இது உனக்கு தேவையா: வீடியோ வைரல் title=

வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கை வேட்டையாட முயன்ற சிறுத்தையின் வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மரத்தின் உச்சியில் புத்திசாலியான குரங்கு ஒன்றை வேட்டையாட முயன்ற சிறுத்தை படுதோல்வி அடைந்தது. வைரலான இந்த வீடியோவில், சிறுத்தை எப்படி இரையை பிடிக்க முயற்சிக்கிறது என்பதை பார்க்கலாம். குரங்கு அந்த சிறுத்தையை கேலி செய்ய ஒரு கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு தாவுவதை நாம் காணலாம். இந்தக் காட்சி வெகுநேரம் அரங்கேறியது.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? சீண்டிய சிங்கத்தை விரட்டி அடித்த எருமையின் வைரல் விடியோ 

சிறுத்தை மற்றும் குரங்கின் வீடியோவை இங்கே பாருங்கள்

குரங்கை சுலபமாக தாக்கி விடலாம் என சிறுத்தை நினைத்துக்கொண்டிருக்கும் அதே நேரம், சிறுத்தையை ஏமாற்ற குரங்கு ஒரு நல்ல திட்டத்தை தீட்டியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. இது இன்ஸ்டாகிராமில் @animalcoterie என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். இந்த சம்பவம் வேடிக்கையாக இருப்பதோடு, திகிலூட்டும் வகையிலும் உள்ளது’ என ஒருவர் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | திகிலூட்டும் வைரல் வீடியோ: மனித தலையை கவ்வியபடி ஓடும் நாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News