நெட்டிசன்களை அழ வைத்த அம்மா குரங்கு, குட்டி குரங்கு: வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவில் ஒரு குட்டி குரங்கையும் அதன் தாயையும் காண முடிகின்றது. இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால், மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2021, 04:38 PM IST
  • தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
  • சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் இதை பார்த்துள்ளனர்.
  • இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
நெட்டிசன்களை அழ வைத்த அம்மா குரங்கு, குட்டி குரங்கு: வைரலாகும் வீடியோ  title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீபத்திய நாட்களில் குரங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

இந்த வீடியோவில் ஒரு குட்டி குரங்கையும் அதன் தாயையும் காண முடிகின்றது. இந்த வீடியோவை ஒரு முறை பார்த்தால், மீண்டும் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது. இதை பார்க்க பார்க்க ஆசையாக  உள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகி, சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் இதை பார்த்துள்ளனர். இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர். 

ALSO READ | Viral: ’ஆணியை உருக்கும் அதிசயக் கல்’ வைரல் வீடியோ - உண்மை என்ன? 

சில நொடிகளே கொண்ட இந்த குரங்கு வீடியோ (Monkey Video) வைரலாகி வருகிறது. இதில் ஒரு குட்டி குரங்கு கிளை விட்டு கிளை தாவுவதை கற்றுக்கொள்கிறது. வேடிக்கை பார்த்துக்கொண்டும், மரக்கிளையில் தொங்கியபடியும் அந்த குரங்கு வேடிக்கையாக பல வேலைகளை செய்கிறது. 

அந்த குட்டி குரங்கின் தாயும் அருகில் இருக்கிறது. குட்டி குரங்கை அம்மா குரங்கு பல்வெறு விதமாக உற்சாகப்படுத்துகின்றது. தாய் குரங்கு தனது குட்டி குரங்கை தடவிக்கொடுத்தும், தலை மேல் பரிவாக கை வைத்தும், தான் அதனுடன் ஆதரவாக இருப்பதை உறுதி படுத்துகிறது.

குரங்கு தாவி குத்தித்து கலாட்டா செய்வதை காணும் தாய் குரங்கு, மகிச்சியடைந்து குட்டி குரங்கிற்கு பல முறை முத்தமிடுவதையும் வீடியோவில் காண முடிகின்றது.

குட்டி குரங்கின் மீது தாய் குரங்கு காட்டும் பாசமும், தாய் குரங்கின் மீது குட்டி குரங்கு காட்டும் அன்பும், காண்பவர்களை, தங்களை மறந்து நெகிழ வைக்கிறது. குட்டி குரங்கின் செயல்கள் தாய் குரங்கை பாசத்தால் பூரித்துப்போக வைக்கின்றன. 

அந்த பாசமான வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ சமூக ஊடக (Social Media) தளமான இன்ஸ்டாகிராமில் monkeyjungleclub என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். வீடியோவை பார்த்துக்கொண்டே இதன் பின்னணி இசையைக் கேட்பதும் நன்றாகவே உள்ளது. 

தாய் என்பவள் தனது குழந்தையின் ஒவ்வொரு செயலிலும் அதற்கு ஆதரவாக இருந்து, தைரியத்தை அளித்து, அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி அழைத்துச் செல்கிறார். விழுந்தால் பிடித்துக்கொள்கிறார், எழுந்தால் பாராட்டுகிறார், தோற்றால் தேற்றுகிறார், தளர்ந்தால் தோள் கொடுக்கிறார். மனிதனானாலும் சரி, விலங்கானாலும் சரி அம்மா, அம்மாதான்.. மத்ததெல்லாம் சும்மாதான்!!

ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News