சஷி கபூரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

சஷி கபூரின் மறைவுக்கு பிரதமர் மோடி டுவிட்டார் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Last Updated : Dec 5, 2017, 10:36 AM IST
சஷி கபூரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! title=

நீண்ட காலமாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் சசி கபூர் இன்று மும்பை கோகிலாபென் அம்பானிய மருத்துவமனையில் காலமானார். 

79 வயதான அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இன்று மாலை 5.20 மணியளவில் காலமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா துறையில் தனது இணையில்லா பங்களிப்பிற்காக 2011-ஆம் ஆண்டு, சஷி கபூர் பத்ம பூஷன் விருது பெற்றார். 2014-ஆம் ஆண்டில் அவருக்கு தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து, பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Trending News