ஒரே மாதத்தில் தொப்பை கொழுப்பு கரையும், உடல் எடை குறையும்: டாப்பான டிப்ஸ் இதோ

Weight Loss Tips: உடல் எடை வேகமாக அதிகரித்து விடுகிறது. ஆனால், அதை குறைப்பது ஒரு பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது. இதற்கான ஒரு எளிய தீர்வை இந்த பதிவில் காணலாம்.

Weight Loss Tips: பலர் உடல் எடையை குறைக்க ஜிம் செல்கிறார்கள், கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் இதனால் தேவையான பலன் கிடைப்பதில்லை. சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க நாம் தினசரி நினைவில் கொண்டு செயல்படுத்த வேண்டிய சில முக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /11

உடல் எடையை குறைப்பது அத்தனை எளிதல்ல. இதற்கு நாம் பலவற்றை கட்டுப்படுத்துவதுடன் பல வித நல்ல பழக்கங்களையும் நம் வாழ்வின் அங்கமாக்க வேண்டும். இவற்றின் மூலம் உடலில் சேரும் கூடுதல் கலோரிகளை குறைத்து, தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைக்கலாம். அப்படிப்பட்ட பழங்கங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /11

தினமும் 7 முதல் 8 மணி நேர உறக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது உடல் பல வித இறுக்கங்களிலிருந்து மீள உதவுகிறது. தினமும் ஒரே சமயத்தில் தூங்கி ஒரே சமயத்தில் எழுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது. இரவு சீக்கிரமாக தூங்கி அதிகாலையில் விழிக்க வேண்டும். தூங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் முன்னதாக இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

3 /11

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிப்பது நல்லது. அதன் பிறகு நாள் முழுவதும் அவ்வப்போது தண்ணீரை குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது கலோரிகளை எரிக்க உதவும். மேலும் நாள் முழுவதும் குடிக்கும் தண்ணீரால் உடல் நீர்ச்சத்துடன் இருப்பதுடன் உடலில் உள்ள நச்சுக்களும் அவ்வப்போது வெளியேற உதவி கிடைக்கும்.

4 /11

காலையில் புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. அதற்கு காலை உணவில் முட்டை, தயிர் அல்லது புரோட்டீன் ஷேக் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். இவற்றால் உடல் எடை குறைவதோடு தசைகள் வலுவாக இருக்கும்.

5 /11

காலையில் அனைவரும் தேநீர் அல்லது காபி குடிக்கிறோம். அதில் பால் சேர்ப்பதற்கு பதிலாக கிரீன் டீ, இலவங்கப்பட்டை டீ, சீரகம் டீ, ஓம தேநீர், சோம்பு டீ போன்ற மூலிகை தேநீர் வகைகளை உட்கொள்ளலாம். அது உடல் கொழுப்பைக் கரைக்க பெரிதும் உதவும்.

6 /11

காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என் அனைத்து வேளைகளிலும் புரதச்சத்து, மினரல்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்ள வேண்டும். இதன் மூலம் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தவிர்த்து தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.

7 /11

ஏழு மணிக்குள் இரவு உணவை உட்கொள்வது நல்லது. அதன் பிறகு ஜீரணிக்க எந்த உணவுகளையும் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். நேரம் கடந்து உணவு உட்கொண்டால் அது செரிமானம் ஆகாமல் உடலில் கொழுப்பு அதிகமாக காரணம் ஆகின்றது.

8 /11

மன அழுத்தத்திற்கும் உடல் பருமனுக்கும் தொடர்புள்ளதாக கூறப்படுகின்றது. மனதில் இறுக்கம் அல்லது அழுத்தம் இருந்தால் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படுகிறது. இதனால் சில சமயங்களில் பசி அதிகமாகி, தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை நாம் சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது.

9 /11

உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருக்க உடல் செயல்பாடுகள் மிக அவசியம். தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி, யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி என ஏதாவது  ஒன்றை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

10 /11

இந்த பழக்கங்களுடன் நாள் முழுதும் சமச்சீரான உணவு, போதுமான உடல் செயல்பாடுகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவையும் உடல் எடையை குறைக்க மிக அவசியமானவை. இவை அனைத்தையும் சேர்த்து ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைத்தால், உடலுக்கு எந்த வித தீங்கும் ஏற்படாமல் இருக்கும்.

11 /11

பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.