FIFA _2018 சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு மோடி வாழ்த்து!

கால்பந்தில் உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து!

Last Updated : Jul 16, 2018, 10:51 AM IST
FIFA _2018 சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு மோடி வாழ்த்து! title=

கால்பந்தில் உலகக்கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து!

உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நேற்று நடைபெற்றது. இதில், குரோசியா அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.  

மேலும்,  பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவானது," உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை" என பதிவிட்டுள்ளார்.

 

Trending News