ஓநாய்களிடம் சிக்கிய சிங்கத்தை கூட்டமாக வந்து காப்பாற்றிய சிங்கங்கள் - மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ

சிங்கம் ஒன்றை கூட்டமாக வந்து ஓநாய் கூட்டம் வேட்டையாட, திடீரென என்டிரி கொடுத்த சிங்கம் கூட்டம் அந்த ஓநாய் கூட்டத்தை தலைதெறிக்க ஓட விட்ட வீடியோ காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 1, 2023, 02:48 PM IST
ஓநாய்களிடம் சிக்கிய சிங்கத்தை கூட்டமாக வந்து காப்பாற்றிய சிங்கங்கள் - மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ title=

சிங்கம் தான் எப்போதும் வேட்டையாடுவது கில்லி என கேள்விப்பட்டிருப்போம். காட்டின் ராஜா என கூறப்படுவதால் சிங்கம் மீதான கற்பனையும் பொதுவாக மக்களிடையே அதிகம் இருக்கிறது. ஆனால் காட்டை பொறுத்தவரை யார் தனியாக சிக்கினாலும் வேட்டையாடப்படுவார்கள் என்பது நியதி. சிங்கமே என்றாலும் தனியாக சிக்கினால் ஓநாய் கூட்டம் உள்ளிட்ட வேட்டை விலங்குகள் வேட்டையாடிவிடும். அவற்றின் தாக்குதலில் இருந்து ஒன்றிரண்டு முறை சாமார்த்தியமாக வேண்டுமானால் தப்பிக்கலாமே தவிர, சிங்கம்... புலி என்ற வேறுபாடு எல்லாம் காட்டில் கிடையாது. உணவு தேவைக்கு யார் யாரை வேண்டுமானாலும் வேட்டையாடுவார்கள். அப்படி தனியாக சிக்கிய சிங்கத்தை ஓநாய் கூட்டங்கள் சுற்றி சுழன்றடித்து வேட்டையாடுகின்றன.

மேலும் படிக்க | ’உலக மகா கிரிக்கட்டு டா சாமி’ இப்படியொரு பீல்டிங்க பார்க்கவே முடியாது - வைரல் வீடியோ

அந்த சிங்கம் தன்னால் இயன்றளவு ஓநாய்களிடம் இருந்து தப்பிக்க பகீரத முயற்சிகளையெல்லாம் எடுக்கிறது. வேகமாக ஓடினால், அதனைவிட வேகமாக ஓநாய்கள் கூட்டமாக ஓடி வருகின்றன. ஒன்றிரண்டு ஓநாய்கள் என்றால் ஒற்றை சிங்கமே அவற்றை துரத்தியடித்திருக்கும். ஆனால், அங்கு நிலமையே வேறு. ஓநாய்களின் பெருங்கூட்டமே இணைந்து சிங்கத்தை வேட்டையாட புறப்பட்டு வந்திருந்தன. எப்படியாவது தப்பித்தால் மட்டுமே வழி என்ற இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டது சிங்கம். வேறு வழியின்றி தன் கோட்டைக்குள் நுழைய வேண்டுமென கடித்து குதறும் ஓநாய்களின் தொடர் தாக்குதலுக்கு இடையே ஓடி வருகிறது சிங்கம். கத்துகிறது.... பிளிறுகிறது...கர்ஜிக்கிறது.. இருந்தாலும் ஓநாய்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

ஓர் இடத்தில் சிங்கத்தை முழுவதுமாக சூழ்ந்து கொள்கின்றன ஓநாய்கள். கடித்து குதுறிக் கொண்டிருக்கும்போது, திடீரென என்டிரியானது சிங்க கூட்டம். யார் இடத்தில் வந்து யாரை சம்பவம் பண்றீங்க என்ற ஸ்டைலில் கும்பலாக வந்தது சிங்க கூட்டம். அப்போது தான் ஓநாய்களுக்கு வந்தது கிலி. தப்பித்தால் போதும் என உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஜெட் வேகத்தில் வேட்டையாட வந்த சிங்கத்தை விட்டு விட்டு வந்த வழியிலேயே ஓடின. கும்பலாக வந்த சிங்கங்கள் விரட்டிய ஓநாய்களை கடித்து வேட்டையை தொடங்கின. 

இதனால், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிங்கம் தப்பிப் பிழைத்தது. தனியாக இருந்தால் கட்டெறும்பு கூட வேட்டையாடும்... கூட்டமாக இருந்தால் மட்டுமே யானையை கூட சமாளிக்கலாம் என்ற சம்பவத்தை உணர்த்தும் விதமாக இந்த வீடியோ வைரலாகியிருக்கிறது. டிவிட்டரில் அதிகமானோரால் பார்க்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஒற்றுமையின் பலத்தை காட்டும் வகையில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | அனகோண்டாவுடன் நேருக்கு நேர் வந்த நபர், பதற வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News