’மிரள வைக்கும் வேட்டை’ தண்ணீருக்குள் சென்று முதலையை கவ்வும் சிறுத்தை: வைரல் வீடியோ

தண்ணீருக்குள் சென்று சிறுத்தை புலி முதலையை வேட்டையாடி வரும் வீடியோ காண்போரை மிரள வைக்கிறது.    

Written by - S.Karthikeyan | Last Updated : May 16, 2023, 07:13 PM IST
  • சிறுத்தை புலியின் வைரல் வீடியோ
  • முதலையை வேட்டையாடுகிறது
  • மில்லியன் பார்வைகளை கடந்து அசத்தல்
’மிரள வைக்கும் வேட்டை’ தண்ணீருக்குள் சென்று முதலையை கவ்வும் சிறுத்தை: வைரல் வீடியோ title=

கம்பீரமான காட்சிகள், மெய்சிலிர்க்க வைக்கும் வித்தைகள், கற்பனைக்கு எட்டாதவற்றை  எல்லாம்  சுவாரஸ்யமாக சினிமாக்களில் பார்த்து மகிழ்ச்சியடையலாம். அதே காட்சிகள் நேரில் பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். உங்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் எல்லாம் வனப்பகுதிகளில் அடிக்கடி பார்க்கலாம். சிங்கம், சிறுத்தை ஜாக்குவார் மற்றும் புலி ஆகிய விலங்குகள் தந்திரமாக வேட்டையாடுவது மிரட்சியை ஏற்படுத்தும். 

மேலும் படிக்க | பாம்பால் அடித்து சண்டை... நம்ப முடியாத சீன்ஸ்: வைரல் வீடியோ

அப்படியான மிரட்சியை ஏற்படுத்தும் வேட்டை வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மறைந்திருக்கும் சிறுத்தை புலி, வேட்டைக்காக காத்திருக்கிறது. அப்போது தண்ணீருக்குள் இருக்கும் முதலை கரையை நோக்கி வருகிறது. உன்னிப்பாக கவனிக்கும் சிறுத்தை புலி, சரியான நேரத்தை எதிர்நோக்குகிறது. அருகில் வேட்டை முதலை வந்தவுடன் சற்றும் தாமதிக்காமல் நீருக்குள் தாவிக்குதித்து, முதலையை வாயில் கவ்வி மேலே இழுத்து வருகிறது. சிறுத்தை புலியிடம் இருந்து தப்பிக்க எவ்வளோ முயற்சி செய்தும், முதலையால் முடியவில்லை.

வாயில் கவ்விக் கொண்டே ஆளுயர மண் கரை மீது சிறுத்தை புலி ஏறுவது தான் காண்போரை இன்னும் வியப்பின் உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறது. பார்க்கும்போதே உடலை சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. முதலை மற்ற விலங்குகளை வேட்டையாடி பார்த்திருக்கிறோம். ஆனால் முதலையையே  சிறுத்தை புலி வேட்டையாடுவதை முதன்முறையாக இந்த வீடியோவில் பார்த்து வியப்படைந்துள்ளனர். இந்த வீடியோ டிவிட்டரில் மட்டும் சுமார் 1.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இந்த வீடியோக்களை பார்த்து வாழ்க்கை தத்துவங்களையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். வாழ்க்கை என்பது எந்த நொடி முடியும் என்பது யாருக்கும் தெரியாது. இங்கு வாழும் எல்லோரும் வேட்டை விலங்குகள் தான். என்றாவது ஒருநாள் வேட்டையாடபடுவோம் என்றெல்லாம் கருத்துகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஓடி வந்தவரின் சோலியை முடித்த ஒட்டகம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News