Video: ராயப்பன் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்...

பிகில் திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Last Updated : Nov 24, 2019, 01:36 PM IST
Video: ராயப்பன் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் பாடல்... title=

பிகில் திரைப்படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மெர்சல், காலா தொடர்ந்து பிகில் திரைப்படத்திற்கு தனி emoji..

அட்லி- விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப்,  விவேக், பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். 

‘பிகில்’ கதைக்கு காப்புரிமை கோரி வழக்கு தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!! 

இந்தப் படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் அப்பாவாக நடித்திருந்த நடிகர் விஜய்யை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். அதேபோல் ராயப்பனின் முந்தைய வாழ்க்கையை படமாக்கும் எண்ணமிருக்கிறதா என்றும் இயக்குநர் அட்லியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விரைவில் வெளியீடு தேதி தெரிவிக்கப்படும் -பிகில் படக்குழுவினர்! 

இந்நிலையில் பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரம் கொல்லப்படும் போது பின்னணியில் ஒலிக்கும் உருக்கமான பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

இன்னும் கொஞ்ச நேரம்..... மிரட்ட காத்திருக்கும் #பிகில் ட்ரைலர் 

‘காலமே’ என்று தொடங்கும் இந்தப் பாடல் மரணித்த தனது அப்பாவை நினைத்து வருந்தும் மகனின் குரலாக ஒலிக்கிறது. நேற்று வெளியான இந்தப் பாடல் இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பாடல் வீடியோவைப் பார்த்த பலரும் கண்ணீர் வடித்ததாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Trending News