கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். தடுப்பூசி இயக்கத்தின் ஓராண்டு நிறைவையொட்டி, தடுப்பூசி இயக்கத்தில் தொடர்புடைய ஒவ்வொரு தனிநபரையும் தான் வணங்குவதாக மோடி தெரிவித்தார்.
தடுப்பூசி இயக்கத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கை பிரதமர் பாராட்டினார். கோவிட்-19க்கு எதிரான போராட்டத்திற்கு இந்தியாவின் தடுப்பூசி திட்டம் பெரும் பலத்தை சேர்த்துள்ளது என்றார்.
MyGovIndia வின் தொடர் ட்வீட்டுக்கு பதிலளித்த பிரதமர் (PM Narendra Modi), "இன்று நாம் தடுப்பூசி இயக்கத்தின் ஒரு வருட நிறைவை கொண்டாடுகிறோம். தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய ஒவ்வொரு நபரையும் நான் வணங்குகிறேன். நமது தடுப்பூசி திட்டம் அதற்கு எதிரான போராட்டத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது. கோவிஒட்-19 தொற்றில் இருந்து உயிர்களைக் காப்பாற்றவும், வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் வழிவகுத்தது."
"COVID-19 தொற்றுநோய் முதலில் தாக்கியபோது, வைரஸைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. இருப்பினும், நமது விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்பாளர்களும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர். தடுப்பூசிகள் மூலம் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் நமது தேசம் பெரும் பங்களிக்க முடிந்ததில் இந்தியா பெருமை கொள்கிறது." என்றார் பிரதமர் மோடி. இந்தியாவின் கோவிட்-19 தடுப்பூசி இயக்கம் தொடங்கி ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
ALSO READ | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!
நமது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பங்கு ஒப்பிட இயலாதது என்று பிரதமர் குறிப்பிட்டார். தொலைதூரப் பகுதிகளுக்கு என்று தடுப்பூசி போட நமது சுகாதாரப் பணியாளர்கள் எடுத்த நடவடிக்கைகளை பார்க்கும் போது, நம் இதயமும் மனமும் பெருமிதம் கொள்கின்றன." என்றார் பிரதமர் மோடி.
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் அணுகுமுறை, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையாக இருக்கும் என்று பிரதமர் வலியுறுத்தினார். நமது குடிமக்கள் அனைவருக்கும் சரியான உடல நல பராமரிப்பை வழங்குவதை உறுதி செய்ய சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம்" என்று பிரதமர் மோடி கூறினார்.
ALSO READ | COVID-19 தொற்றுக்கு ஒமிக்ரான் முடிவுரை எழுதுமா; UK பேராசிரியர் கூறுவது என்ன...!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR