இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளின் வீடியோ வைரலாகிறது. பிரபல கிரிக்கெட் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ரசிகர்களின் நடன வீடியோ வைரல் ஆகிறது.
இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ரீல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரங்கள் தற்போது ஆஸ்திரேலியாவில், மைதானத்திலும் வெளியேயும் பெரும் பரபரப்பை உருவாக்கி வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் மகளிர் பிக் பாஷ் லீக்கில் (Women’s Big Bash League) பங்கேற்க பல இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள் சென்றுள்ளனர்.
பிக் பாஷ் லீக் மற்றும் ஆண்கள் டி 20 உலகக் கோப்பை சலசலப்புக்கு மத்தியில், கிரிக்கெட் வீரர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் ரீல், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
இந்த வீடியோ கிளிப்பில் 5 பேர் "இன் கெட்டோ" பாடலிலுக்கு நடனமாடுவதைக் காணலாம். ஜெமிமா, ஸ்மிருதி மந்தனா, ராதா யாதவ், ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பூனம் யாதவ் என ஐந்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் இந்த வீடியோவில் நடனமாடுகின்றனர்.
"குழுவினருடன் 'இன் டா கெட்டோ' ரீலை முயற்சித்தோம்! இந்த நடன வீடியோவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்" என்ற பதிவுடன் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 100,000 லைக்குகளைப் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த மகளிர் பிக் பாஷ் லீக்கில், ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஹர்மன்பிரீத் கவுர் மெல்போர்னுக்காகவும், ஸ்மிருதி மந்தனா சிட்னி அணிக்காகவும், பூனம் யாதவ் ஹோபார்ட்டிலும் விளையாடினர். இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் பலர் நடனமாடும் இந்த வீடியோவை கிரிக்கெட் ரசிக ரசிகைகள் கொண்டாடுகின்றனர்.
Read Also | அவதியிலும் அசால்டாக அட்டகாசம் செய்யும் இளைஞர்: Watch Video
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR