திடீர்ன்னு இப்படி செய்யாதடா! ஹார்ட் அட்டாக் வந்திரும்! மியாவ் பூனையை மிரள வைத்த வெளவால்

Today's Cat Video: இந்த வீடியோவைப் பார்த்து குபீர்ன்னு சிரிச்சா அதுக்கு நாங்க பொறுப்பில்ல... பாத்து நிதானமா பாருங்க

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 25, 2023, 10:30 PM IST
  • என்ன கொடுமை சார் இது? இப்படி எப்புடி?
  • பூனையை புலம்ப வைத்த வெளவால்
  • மியாவை மிரள வைத்த குட்டியூண்டு பிராணி
திடீர்ன்னு இப்படி செய்யாதடா! ஹார்ட் அட்டாக் வந்திரும்! மியாவ் பூனையை மிரள வைத்த வெளவால் title=

Latest Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் எதற்காக விரும்பப்படுகின்றன என்பதற்கு காரணம் எதுவும் சொல்லிவிட முடியுமா? வித்தியாசமான வீடியோ, இதுவரை பார்த்திராத அதிசயம், அதிர்ச்சி வீடியோ, நெகிழ்ச்சியான காட்சிகள் என பல காரணங்கள் இருக்கலாம். எது எப்படியிருந்தாலும், உலகம் முழுவதும் இருந்து நாள்தோறும் கோடிக்கணக்கான வீடியோக்கள் இணையத்தில் பகிரப்படுகின்றன.

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைத்தால், சில சமயம் இப்படி எப்படிப்பா என கேள்வியை எழுப்புகின்றன. சில சமயம் ஆச்சரியப்பட வைக்கும் பல வீடியோக்கள் பல சமயங்களில் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, வித்தியாசமான காட்சிகளை பார்ப்பதில் மக்களுக்கு எப்போதுமே ஆர்வம் அதிகம் இருப்பதால், வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன

அதிலும் விலங்குகள் வீடியோக்கள் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றன. அதிலும், வீட்டு விலங்குகள் என்றால் இப்படித் தான் இருக்கும் என நாம் நினைத்திருப்பதற்கும், நடைமுறைக்கும் வித்தியாசம் ஏற்பட்டால், அது ஆச்சரியம் அளிக்க்கும். நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் நாய்க்குட்டி முதல் புலிக்குட்டி என பல வீடியோக்கள் பலரால் ரசிக்கப்பட்டு பகிரப்பட்டு வைரல் ஆகின்றன.

மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

வீட்டில் வளர்க்கப்படும் பூனைக்குட்டி, நாய்க்குட்டி போன்றவை செய்யும் அட்ராசிட்டிகள் அனைவருக்கும் பிடித்தவை. அதிலும் பூனையும் நாயும் சேர்ந்தால், டாம் அண்ட் ஜெர்ரி என கலகலப்பாக பொழுது போய்விடும். ஆனால், இந்த வீடியோவைப் பார்த்தால், குபீரென்று சிரிப்பு வந்துவிடும்.

திடீரென வெளவால் பறப்பதால், அதை எதிர்பாராத பூனை கொடுக்கும் ரியாக்‌ஷன், குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. நமக்கே, அது வெளவால் தானா என ஒரு சந்தேகம் எழுவதால், அதை இரண்டு மூன்று முறை பார்க்க வேண்டியிருக்கிறது. 

மேலும் படிக்க | Viral Video: பாம்பு எனக்கு பஞ்சுமிட்டாய்... தில்லாக சவாரி செய்யும் தவளை!

இந்த வீடியோ பார்ப்பதற்கு வித்தியாசமானதய் இருப்பதால், பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவை முழுதும் பார்த்தால், புலி, பூனைக்குட்டி ஆனதைப் போன்ற ஃபீலிங் தோன்றும். ஆனால், இது பூனைக்குட்டி தானே பாஸ் என சிலர் கலாய்க்கவும் செய்கின்றனர். இந்த வீடியோவில், பூனையின் ரியாக்‌ஷன் மாஸ். 

அதிலும், இயலபாய் நகர்ந்து வரும் வெளவால், மெதுவாக டேக் ஆஃப் எடுக்கும்போது, நொடிக்கு நொடி மாறும் பூனையின் முக பாவனை ஆச்சரியம் அளிக்கிறது.  

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் உறுதி செய்யவோ, பரிந்துரைக்கவோ இல்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News