மிருகமான மனிதர்கள்.. ம.பி யில் சிறுத்தைக்கு நடந்த கொடூரம்!

மக்கள் கூட்டம் ஒன்று நோய் வாய்ப்பட்ட சிறுத்தையை தாக்கியதோடு அதனுடன் செல்பி எடுத்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - Ezhilarasi Palanikumar | Last Updated : Aug 30, 2023, 05:14 PM IST
  • சிறுத்தையை பாடாய்படுத்திய கிராம மக்கள்.
  • சிறுத்தையுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்.
  • சிறுத்தையை துன்புறுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
மிருகமான மனிதர்கள்.. ம.பி யில் சிறுத்தைக்கு நடந்த கொடூரம்! title=

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் மாவட்டத்தில் காலி சிந்து நதிக்கரையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரத்தில் கிராம மக்கள் அங்கு சிறுத்தை இருப்பதை கண்டனர். அந்த சிறுத்தை சோம்பலாகவும், நடப்பதற்கே சிரமப்பட்டும் காணப்பட்டது. இந்த செய்தி கிராமத்திற்குள் பரவியதும் சிறுத்தையை காண மக்கள் கூட்டம் கூட்டமாக கிளம்பினர் 

ஆரம்பத்தில் சிறுத்தையின் அருகில் செல்ல மக்கள் பயந்தாலும் அதன் ஆக்ரோஷம் தென்படாததால் அந்த நோய் வாய்ப்பட்ட சிறுத்தையுடன் விளையாட துவங்கினர். ஒரு கட்டத்தில் எல்லை மீறி போய் சிலர் சிறுத்தையின் மேல் அமர்ந்து சவாரி செய்ய துவங்கினர் பலர் அதனுடன் செல்பி எடுக்கவும் செய்தனர்.

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்

இந்த வீடியோக்கள் வைரல் ஆனதை அடுத்து செவ்வாய்க்கிழமை மாலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர், அதனைத் தொடர்ந்து உஜ்ஜயிணியில் இருந்து மீட்பு குழுவினரும் வந்தனர். தொடர்ந்து தேவாஸ் வனத்துறை ஊழியர்கள் சிறுத்தையை மீட்டனர். இதற்கிடையில், செவ்வாய்கிழமை மாலை வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர், அதைத் தொடர்ந்து உஜ்ஜயினியில் இருந்து மீட்புக் குழுவினர் வந்தனர். தேவாஸ் வனத்துறை ஊழியர்கள் மற்றும் குழுவினர் சிறுத்தையை மீட்டனர். 

இது பற்றி பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர் சிறுத்தை நோய் வாய்ப்பட்டு இருக்கலாம் அல்லது அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு இருக்கலாம் அதனால்தான் இப்படி மந்தமாக உள்ளது என்றார். இதனை அடுத்து கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் தௌலத்பூர் ஓய்வு இல்லத்தில் சிறுத்தை வைக்கப்பட்டது. இப்போது சிகிச்சைக்காக இந்தூர் உயிரியல் பூங்காவிற்கு அழைத்துச் செல்லப்படும் சிறுத்தை சிகிச்சை முடிந்ததும் காட்டில் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய்வாய்பட்ட சிறுத்தையை கூட்டமாக சேர்ந்து பலரும் துன்புறுத்தும் காட்சிகளை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர்கள் இந்த விவகாரத்திற்கு தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் சோசியல் மீடியாக்களில் வைரலானதை அடுத்து இது பற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள் உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் இருந்தால் ஆரோக்கியமான சிறுத்தையிடம் போய் இந்த விளையாட்டுகளை செய்து பாருங்கள் என்று கமெண்ட் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News