எனக்கும் பசிகும்ல...போட்டி போட்டு சாப்பிடும் எலிக்கூட்டம்!

அழகிய எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டுகொண்டு உணவை வேகமாக சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 16, 2022, 02:24 PM IST
  • உணவை வேகமாக சாப்பிடும் எலிக்கூட்டம்.
  • போட்டிபோட்டு கொண்டு ருசித்து சாப்பிடுகின்றன.
  • இணையத்தில் வைரல் ஆனா வீடியோ.
எனக்கும் பசிகும்ல...போட்டி போட்டு சாப்பிடும் எலிக்கூட்டம்! title=

உணவு என்பது உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான ஒன்று, ஒவ்வொருவரும் ஓய்வில்லாமல் உழைப்பதன் முக்கியமான காரணம் உணவு தான்.  தற்போது இங்கு இணையத்தில் பரவியுள்ள வீடியோ ஒன்றில் சில எலிக்குட்டிகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு வேகமாக அவற்றிற்கான உணவை அழகாகி கொறித்து உண்ணுகின்றன.  பெரும்பாலும் எலிகள் நாம் வீட்டில் வைத்திருக்கும் பொருட்களை கடித்து நாசம் செய்துவிடும், அதனால் பலருக்கும் எலிகளை பார்த்தாலே பிடிக்காது.  ஆனால் இந்த காணொளியில் காணப்படும் எலிகளோ பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.

மேலும் படிக்க | Viral Video: அட இது நான் தானா... குரங்கு குட்டியின் க்யூட் ரியாக்‌ஷன் 

சமூக வலைத்தளமான ட்விட்டரில், பைடெங்பைடென் என்கிற கணக்கு பக்கத்தில் இந்த கியூட்டான வீடியோ பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு சுவற்றின் மீது ஆறு அழகிய எலிக்குட்டிகள் வரிசையாக அமர்ந்து இருக்கின்றன, அதில் இரண்டு எலிகள் வெள்ளை மற்றும் பழுப்பு கலந்த நிறத்திலும், மற்ற நான்கு எலிகள் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றன.  அதில் நான்கு எலிகளுக்கு உணவு கிடைத்துவிட்டது, அந்த உணவை அவை வேகமாக நின்றுகொண்டு இருக்கும்போது மற்ற இரண்டு எலிகள் வேகமாக அவை திண்பதை பிடுங்கி திங்க முயல்கின்றன.  பின்னர் ஒவ்வொன்றும் போட்டிபோட்டுக்கொண்டு ஒவ்வொரு எலியின் வாயில் இருக்கும் உணவையும் பறிக்க முயல்கின்றன.

 

இந்த காட்சி ரசிக்கும்படியாக அமைந்து இருக்கிறது, இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை முப்பத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் லைக் செய்தும், பலர் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | அடேங்கப்பா; நெருப்பில் ஸ்டண்ட் செய்த மணமக்கள்; வாயைப் பிளத்த நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News