இன்னும் வெயிலே வரல! அதுக்குள்ள இவ்வளவு தண்ணித்தாகமா? அணில் வீடியோ வைரல்

Water Drinking Squirrel: அணிலுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தணித்த இந்த இளைஞர், அதை கையில் எடுத்து தடவிக் கொடுப்பதும், அந்த அணில், பாசத்துடன் அவர் கையில் ஏறுவதும் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 9, 2023, 08:18 PM IST
  • தண்ணி அடிக்கும் அணில்!
  • அணிலுக்கு நீர் வார்க்கும் பணியாளர் வீடியோ வைரல்
  • பாசத்துடன் கையில் ஏறும் அணில் குட்டி
இன்னும் வெயிலே வரல! அதுக்குள்ள இவ்வளவு தண்ணித்தாகமா? அணில் வீடியோ வைரல் title=

Squirrel Viral Video: சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் வீடியோக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. நாம் பார்க்கவே முடியாத விஷயங்களையும் நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் வீடியோக்கள் அனைவரின் மனதையும் கவர்வதால் வைரலாகின்றன. அதிலும் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் ஏற்படுத்தும் விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. ரசனைக்குரிய வீடியோக்களில், அன்பு, பாசம், நேசம், மோதல், ஊடல், கூடல் என நவரசங்களும் பார்த்து ரசிக்க வைக்கும் வகையில் இருக்கிறது.  

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான வீடியோக்கள் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்படுகின்றன. அதிலும் நாம் அன்றாடம் பார்க்கும் குட்டிக்குட்டி உயிரினங்களின் குறும்பு வீடியோக்களுக்கு பலரும் ரசிகர்களாகிவிடுகின்ரனர்.

காதல், மோதல், சண்டை என பல்வேறு விதமான வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு,அவை வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன. வைரல் வீடியோக்கள் லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளுகின்றன.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

விலங்குகளின் காதலையும், ஊடலையும் பார்த்து மகிழ வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று பாம்பு தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகிறது. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்கள்.

இந்த வீடியோவில் தாகம் எடுத்த அணிலுக்கு தண்ணீர் கொடுக்கும் பணியாளர், அனைவரின் மனதையும் கவர்கிறார். ராமருக்கு பாலம் கட்ட உதவிய அணிலை, ராமர் தடவிக் கொடுத்ததால், அவற்றின் முதுகில் கோடு உள்ளது என்று சொல்வார்கள்.

அதேபோல, அணிலுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் தணித்த இந்த இளைஞர், அதை கையில் எடுத்து தடவிக் கொடுப்பதும், அந்த அணில், பாசத்துடன் அவர் கையில் ஏறுவதும் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது.

அணில் செய்தது சிறு உதவி என்றாலும், அது உதவி செய்வதற்கான உதாரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல, தாகத்துக்கு தண்ணீர் கொடுத்த இளைஞர்களுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | பாம்புக்கு தண்ணீர் கொடுத்த நபர்: ‘நீங்க நல்லா இருக்கணும்’ என வாழ்த்தும் நெட்டிசன்கள்

தண்ணீர் குடிக்கும் பாம்பெல்லாம் தண்ணீர்பாம்பு கிடையாது

விலங்குகளும் தங்கள் இரையை தேடி உண்கின்றன. தண்ணீர் குடிக்கும் அணில் வீடியோ வைரலாகிறது. புலி, மான், யானை என பிற விலங்குகள் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கலாம். ஆனால், அணில் தண்ணீர் குடிக்கும் வீடியோ வைரலாகி பார்த்ததுண்டா?  

அணிலை நாம் அன்றாடம் பார்த்தாலும் பாட்டிலில் இருந்து நீர் அருந்தும் அணிலையும், அணிலுக்கு நீர் கொடுக்கும் இளைஞரையும் பார்த்து ரசிக்கும் நெட்டிசன்கள், லைக்குகளை அள்ளித் தெளிக்கின்றனர்.

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News