Video: இனி பள்ளிக்கு Cellphone கொண்டுவந்தால் இதுதான் முடிவு!

தெற்கு ஆப்பிரிக்காவின் பள்ளி ஒன்றில் பள்ளி நிர்வாக்கத்தின் விதியை மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்த மாணவர்களின் செல்போன்களை நொறுக்கப்பட்டது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 4, 2018, 03:57 PM IST
Video: இனி பள்ளிக்கு Cellphone கொண்டுவந்தால் இதுதான் முடிவு! title=

தெற்கு ஆப்பிரிக்காவின் பள்ளி ஒன்றில் பள்ளி நிர்வாக்கத்தின் விதியை மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்த மாணவர்களின் செல்போன்களை நொறுக்கப்பட்டது அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது!

தெற்கு ஆப்பிரக்காவின் காப்பான் பகுதியில் இருப்பது 'லியேசி ஜோசப் அம்பாரூட் அவரோ' பள்ளி. இப்பள்ளில் மாணவர்கள் பள்ளிக்கு செல்போன் எடுத்துவர அனுமதி இல்லை. பள்ளியின் விதி மீறி பள்ளிக்கு செல்போன் எடுத்து வரும் மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 24-ஆம் நாள் அப்பள்ளியின் மைதானத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட செல்போன்கள் சுத்தியால் சுக்குநூறாக நொறுக்கப்பட்டுள்ளது. போன்களை அடித்து நொறுக்கியவர் அப்பள்ளியின் காவலர் என தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோவானது முகப்புத்தக்கதில் சுமார்18000 பகிர்வுகளை பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பள்ளி நிற்வாகம் தெரிவிக்கையில்... பள்ளி விதியை மீறி செல்போன் எடுத்து வரும் மாணவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த வழக்கத்தால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை சிதைக்கும் பணி நடைப்பெற்றது. இந்த வீடியோவில் உடைக்கப்பட்ட செல்போன்களில் 60% செல்போன்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் பறிமுதல் செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களிடன் தொடர்ந்து தெரியபடுத்தி வருவதாகவும், எனினும் மாணவர்களும் சரி, அவர்களது பெற்றோர்களும் விதிமுறையினை பின்பற்றுவது போல் தெரியவில்லை. இதன் காரணமாக தான் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது எனவும் பள்ளியின் மேளாலர் எசாங்க் தெரிவித்துள்ளார்

Trending News