Laughter Video: ‘அட கடவுளே.. இது தேவையா!!’ வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Farmer Couple Viral Video: காதலர் தினத்தன்று மனைவியை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சம் கணவர் என்ன செய்தார் தெரியுமா? பாவம் வீட்டுக்கு போயி என்ன பாடுபட்டாரோ என்று நினைத்து சிரிக்க வைக்கும் காமெடி வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 16, 2023, 04:45 PM IST
  • காதலர் தினத்தன்று மனைவியை கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சம் கணவர் என்ன செய்தார்?
  • பாவம் வீட்டுக்கு போயி என்ன பாடு பட்டாரோ பயபுள்ள?
  • தண்ணீருக்கும் டிமிக்கி கொடுத்த விவசாயி
Laughter Video: ‘அட கடவுளே.. இது தேவையா!!’ வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பலவித வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருகின்றன. அவை வெவ்வேறுவிதமான உணர்வுகளைக் கொடுத்தாலும், காதல், அன்பு, சிரிப்பு என மனதிற்கு நெருக்கமான வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அதிலும் பார்த நொடி முதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி 10 விநாடிகளில் முடிந்தாலும், பல நிமிடங்கள் சிரிக்க வைக்கும் வீடியோக்கள் வைரலாகின்றன.

ஆனால், அதுபோன்ற வீடியோக்கள் மிகவும் குறைவுதான். வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதுவும் அந்த வீடியோவில் இருப்பது ஒரு இயல்பான தம்பதிகள் என்பது ஆச்சரியமான விஷயம், வீடியோதொடங்கிய சில நொடிகளிலேயே தொடங்கும் சிரிப்பு பல நிமிடங்கள் வரை நிறுத்த முடியாமல் தொடர்கிறது என்பதை வீடியோவைப் பார்த்தால் தெரிந்துக் கொள்ளலாம்..

மேலும் படிக்க | Viral Video: உடும்பை கபளீகரம் செய்ய துடிக்கும் ராஜ நாகம்! திக் திக் நிமிடங்கள்! 

வைரலாகும் இந்த வீடியோவில், தன் மனதுக்கு பிடித்த பெண் நடக்கும்போது அவருக்கு காலில் ஈரமோ அழுக்கோ சேறோ படக்கூடாது என்ற எண்ணத்தில் விவசாயி தன்னுடைய சட்டையைக் கழற்றி விவசாய வயலில் போடுகிறான்.

இப்படி ஒரு காதலனா என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அதிலும் அன்போடு ஆண் செய்யும் பணிவிடையும், அதை பெருமையுடன் பெண் ஏற்றுக் கொள்வதையும் பார்க்கும்போது, அடடா நமக்கு இப்படி ஒரு ஆள் வாய்க்காதா? என வாய்விட்டு கேட்காதவர்கள் குறைவாகவே இருப்பார்கள்.

மேலும் படிக்க | ஷ்ஷ்... ஷூல பாம்பு: ஆடிப்போன நபர், அசத்தல் வைரல் வீடியோ 

கணவரின் விசித்திரமான செயல்

அந்தப் பெண், ஒரு காலை சட்டையின் மீது எடுத்து வைத்த நடந்தவுடன், அடுத்த அடியை எடுத்து வைப்பதற்காக, அந்த ஆண், சட்டையை திருப்பி, மீண்டும் தரையில் போடுகிறான். ஒய்யாரமாக நடைபயிலும் அந்தப் பெண், ஜாலியாக காலை எடுத்து சட்டையின்மீது வைக்கிறார்.

அதன் பிறகு அடுத்த நொடி என்ன நடக்கிறது? நாம் குபீரென்று சிரிக்கலாம். அந்த வீடியோவைப் பார்த்தால் சிரித்து சிரித்து வயிறு வலித்தால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல.

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவைப் பார்த்து வயிறு குலுங்க சிரிக்கும் காதலனை காதலிகள் சந்தேகமாக பார்க்கிறார்களாம்!

இந்த வீடியோவிற்கு நெட்டிசன்களும் பல வித நெகட்டிவ் கமெண்ட்களை அள்ளி வீசி வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவை இதுவரை லட்சக்கணக்கானோர் பார்த்து சிரித்து மன அழுத்தத்தை குறைத்துவிட்டார்களாம்!

மேலும் படிக்க | Elephant Video: அய்யோ பாவம் எப்படி காப்பாத்தப் போறாங்க? பகீரென திகில் எழுப்பும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News