புதுடில்லி: சாலைவழி ஆம்புலன்ஸ் சேவைகளைத் தவிர, இப்போது ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் முதல் மிதக்கும் ஆம்புலன்ஸ் இயக்கப்படும். இதம் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைவார்கள்.
சுகாதார வசதிகளுடன் கூடிய இந்த ஆம்புலன்ஸ் சேவை விரைவில் ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கிலுள்ள தால் ஏரியில் செயல்படத் தொடங்கும்.
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹௌஸ்போட் அதாவது படகுவீடு வைத்திருக்கும் தாரிக் அகமது பட்லூ என்ற ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வெண்டிய நிலை ஏற்பட்டபோது, இப்படிப்பட்ட மிதக்கும் ஆம்புலன்ஸ் பற்றிய ஒரு யோசனை அவருக்குத் தோன்றியது.
ஏ.என்.ஐ. பட்லூவுடன் பேசுகையில், “அந்த நேரத்தில் நான் கொரோனா வைரஸுக்கு (Corona Virus) ஆளானபோது, மருத்துவமனையை அடைய எனக்கு ஒரு படகை வழங்கிய என் நண்பரைத் தவிர வேறு யாரும் எனக்கு உதவ முன்வரவில்லை. இது எனக்கு மிகவும் வேதனை அளித்தது. அப்போதுதான் படகுகளில் சிறப்பம்சம் வாய்ந்த மிதக்கும் ஆம்புலன்ஸ் தயாரிக்க முடிவு செய்தேன்.”
J&K: First floating ambulance service to begin soon at Dal Lake in Srinagar.
"I got the idea of an ambulance boat when I was diagnosed with #COVID19. We'll have medical equipment on boat & also get a toll free number. It was a real necessity for the locals," says the boat owner. pic.twitter.com/RKc4jxGXeF
— ANI (@ANI) December 17, 2020
"தால் ஏரியின் அருகில் வசிக்கும் மக்கள் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட டஜன் கணக்கான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அவசர நேரத்தில் அவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. எனவே இந்த மிதக்கும் ஆம்புலன்ஸ் எதிர்காலத்தில் தால் ஏரி பகுதியில் வசிக்கும் மக்களின் உயிர் மற்றும் உடல் நலத்தை காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.
ALSO READ: இந்த மாநிலத்தில் ஜனவரி 1 முதல் பள்ளிகள் துவங்குகின்றன; தேர்வு தேதிகளும் அறிவிப்பு..!
தால் ஏரிக்கு (Dal Lake) அருகில் வசிக்கும் மக்களின் நலனுக்காக இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். “ஆம்புலன்ஸ் அவசர காலங்களில் மக்களுக்கு சரியான சுகாதார சேவைகளை வழங்கும். ஆக்ஸிஜன் சிலிண்டர், ஈ.சி.ஜி, ஆக்சிமீட்டர், சக்கர நாற்காலி மற்றும் ஸ்ட்ரெச்சர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் இதில் அளித்துள்ளோம். மேலும், இதில் ஒரு கட்டணமில்லா எண்ணையும் எழுதியுள்ளோம். இதன் மூலம் மக்கள் எங்களை எளிதில் தொடர்பு கொள்ள முடியும்” என்று அவர் மேலும் கூறினார்.
ஆம்புலன்ஸ் (Ambulance) படகின் மெக்கானிக் ரியாஸ் அஹ்மத், இந்த ஆம்புலன்ஸ் மரம் மற்றும் இரும்புத் தாள்களால் ஆனது என்றும், இதன் நீளம் 35 அடியாக இருக்கும், நடுவில் ஆறு அடி இடம் இருக்கும் அன்று ஏ.என்.ஐ.க்கு தெரிவித்தார்.
"நோயாளிகள் 3 முதல் 4 நிமிடங்களுக்கு முன் வந்திருந்தால், அவர்களது உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறிய பல சம்பவங்கள் தால் ஏரி பகுதியில் நடந்துள்ளன. இந்த வசதி ஒரு மருத்துவமனையை அடையும் நேரத்தை மிச்சப்படுத்தும். இது சுற்றுலாப் பயணிகளுக்கும் உதவியாக இருக்கும். ஏனெனில் சுற்றுலாப் பருவத்தின் உச்சத்தில் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வருகிறார்கள். அவர்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை தேவை. இப்போது இந்த வசதி மூலம் அவர்களுக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்” என்று மற்றொரு படகுவீடு வைத்திருக்கும் பிலால் அஹ்மத் கூறினார்.
ALSO READ: 55 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா- வங்க தேசம் இடையிலான ரயில் சேவை தொடக்கம்...!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR