Viral Pic: கைக்குழந்தையுடன் காவல் பணியில் ஈடுப்பட்ட UP பெண் காவலர்!

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்களன்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் காவல் பணியில் ஈடுப்பட்ட ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தை தனது கைகளில் சுமந்து வந்துள்ளார். இந்த சம்பவம் ஆனது தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Last Updated : Mar 2, 2020, 03:39 PM IST
Viral Pic: கைக்குழந்தையுடன் காவல் பணியில் ஈடுப்பட்ட UP பெண் காவலர்! title=

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்களன்று கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் காவல் பணியில் ஈடுப்பட்ட ஒரு பெண் காவலர் தனது கைக்குழந்தை தனது கைகளில் சுமந்து வந்துள்ளார். இந்த சம்பவம் ஆனது தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதுகுறித்து அந்த பெண் காவலர் பிரிதி ராணி தெரிவிக்கையில்., "என் குழந்தையின் தந்தைக்கு அன்று ஒரு பரீட்சை இருந்தது. அதன் கார்ரணமாக அவரால் எனது குழந்தையினை பார்த்துக்கொள்ள இயலவில்லை. இறுதியில் நானே என் குழந்தையை கவனித்துக்கொள்ளலாம் என கையோடு கொண்டு வந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார்.

"கடமையும் முக்கியமானது, எனவே நான் குழந்தையை இங்கு அழைத்து வர வேண்டியிருந்தது" என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

20 வயது மதிக்கத்தக்க இந்த பெண் காவலர் கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள காவல்நிலையத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் வருகையையொட்டி VVIP பாதுகாப்பு பணியில் காலை 6 மணி முதல் இருந்துள்ளார். நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்காவிற்கு வெளியே தனது கடமையை செய்த பெண் காவலர் தனது குடும்பம் மற்றும் கடமையை தான் ஒரே சமையத்தில் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை, இரண்டு நாள் பயணமாக நொய்டா நகருக்கு விஜயம் செய்தார். இந்த பயணத்தில் திங்கள்கிழமை, 1,452 கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும் 1,369 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான மகேஷ் சர்மா, தருண் விஜய் மற்றும் சுரேந்திர நகர், மற்றும் MLA-க்கள் பங்கஜ் சிங், திரேந்திர சிங் மற்றும் தேஜ்பால் ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு, முதல்வர் மதியம் 12.30 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News