Viral Video: மிரட்டும் எலி... அஞ்சி நடுங்கும் பூனை... இது தான் ரியல் Tom & Jerry!

டாம் அண்ட் ஜெர்ரி கார்டூனில், அளவில் பெரிதான மற்றும் வலிமையான பூனை, சின்னஞ்சிறு எலியிடம் படாத பாடு படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த கார்டூனுக்கு ரசிகர்கள் என்றால் மிகையில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 20, 2022, 06:46 PM IST
  • வைரல் வீடியோவில், பூனைக்கும் ஒரு குட்டி எலிக்கும் இடையே ஒரு போராட்ட தருணத்தை காணலாம்.
  • குழந்தைப் பருவத்தில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா என்ன.
  • எத்தனை வகையான கார்டூன் தொடர்கள் வந்தாலும் டாம் அண்ட் ஜெர்ரி இடத்தை எவராலும் பிடிக்க முடியாது.
Viral  Video: மிரட்டும் எலி... அஞ்சி நடுங்கும் பூனை... இது தான் ரியல் Tom & Jerry! title=

வைரல் வீடியோ: குழந்தைப் பருவத்தில் டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் பார்க்காதவர்கள் இருக்க முடியுமா என்ன. அவர்களின் நிஜ வாழ்க்கைப் பதிப்பின் இந்த வீடியோ நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும். ஆம், டாம் அண்ட் ஜெர்ரியின் கதாபாத்திரங்களைப் போலவே பூனையும் எலியும் ஒன்றையொன்று துரத்திச் சண்டையிடுவதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வலம் வருகிறது. ViralHog என்ற ட்விட்டர் பயனரால் பகிரப்பட்ட வீடியோவில், ஒரு கருப்பு  வெள்ளை பூனையும் ஒரு சிறிய எலியும் ஒன்றையொன்று துரத்துவதையும், பூனை தனது பாதங்களால் அதை தாக்க முயற்சிப்பதையும் காட்டுகிறது.

டாம் அண்ட் ஜெர்ரி கார்டூனில், அளவில் பெரிதான மற்றும் வலிமையான பூனை, சின்னஞ்சிறு எலியிடம் படாத பாடு படும். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த கார்டூனுக்கு ரசிகர்கள் என்றால் மிகையில்லை. இன்றும் அதற்கு ரசிகர்கள் உண்டு, எத்தனை வகையான கார்டூன் தொடர்கள் வந்தாலும் டாம் அண்ட் ஜெர்ரி இடத்தை எவராலும் பிடிக்க முடியாது என்றால் மிகையில்லை.

மேலும் படிக்க | Viral Video: நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் வாத்து!

வைரலாகும் வீடியோவை கீழே காணலாம்:

 

65 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற வைரல் வீடியோவில், பூனைக்கும் ஒரு குட்டி எலிக்கும் இடையே ஒரு போராட்ட தருணத்தை காணலாம். எலி தன்னைத் தற்காத்துக் கொள்ள பூனையைத் அச்சுறுத்துகிறது. ஆனால் பூனை எலியின் அச்சமில்லாத நடவடிக்கையை கண்டு தாக்க தயங்கி பின் வாங்குகிறது. வீடியோவின் முடிவில், பூனை தோல்வியை ஏற்றுக்கொண்டதையும், பின்வாங்குவதையும், குட்டி எலி அதை விரட்டியடிப்பதையும் பார்வையாளர்கள் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: கூட்டு களவாணிகள் என்றால் இவர்கள் தானோ... சிறுமியை அலர்ட் செய்யும் நாய்!

மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News