குழந்தைகள் எது செய்தாலும் அழகு தான். அவர்கள் இது செய்யலாம்... இதனை செய்யகூடாது என்ற வரைமுறை எல்லாம் இல்லை. தங்களுக்கு தோன்றுவது எதுவோ அதனை கள்ளம்கபடமில்லாமல் செய்துவிடுவார்கள். இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், அவர்கள் செய்யும் அனைத்து விஷயங்களுமே நகைச்சுவையை மட்டுமே ஏற்படுத்தும். சின்ன சின்ன சேட்டையாகட்டும், அவர்களின் கோபமாகட்டும், வயிறு குலுங்க ஒருவரை சிரிக்க வைத்துவிடும்.
கோபம் வந்துவிட்டால், அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதமே அழகு தான். எப்படி வெளிப்படுத்துவார்கள் என்பதை பார்த்தும் இன்னும் கூடுதல் அழகு. முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு, அந்தநேரத்தில் அவர்கள் செய்யும் சேட்டை, காண்போரை நகைப்பின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றுவிடும். அந்தவகையில் சுட்டிக் குழந்தை ஒன்று கோபமாக, ஐஸ் கிரீம் கடைக்காரரை முறைத்துக் கொண்டு கடையை எட்டி உதைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி, காண்போரை ரசிக்க வைத்துள்ளது.
எப்பா... பயங்கர கோவக்காரனா இருப்பான் போல... pic.twitter.com/JG1TD2yWHA
— (@FilmFoodTravel) August 25, 2022
அந்த வீடியோ ஏதோ ஒரு விருந்தில் எடுக்கப்பட்டது போன்று தெரிகிறது. அந்த விருந்தில் ஐஸ் வாங்கச் செல்லும் குழந்தையிடம், ஐஸ் கிரீம் வைத்திருப்பவர் அதனை கொடுக்காமல் கொஞ்சம் விளையாட்டு காட்ட முயற்சிக்கிறார். அது அந்த குழந்தைக்கு பெரும் கோபத்தை வரவழைத்துவிட்டது. உடனே, கோபத்தில் ஐஸ் கிரீமை கூட வாங்காமல் கடை அடித்து உதைக்கிறது. மீண்டும் ஐஸ் கிரீம் அவர் கொடுக்க முன்வந்தபோதும் கூட அதனை வாங்காமல் கோபத்தை சுட்டித் தனமாக காட்டி, கடையை உதைத்துக் கொண்டே இருக்கிறது. சுட்டிக் குழந்தையின் இந்த வீடியோ இணைய வாசிகளை வெகுவாக கவர்ந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
மேலும் படிக்க | Viral Video: யானையின் ‘Cat Walk’; இணையவாசிகளை சொக்க வைத்த ஒய்யார நடை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ