சில சமயங்களில் சிலர் செய்யும் செயல்கள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அதுவும் அவர்கள் முழு மனதுடன் அவற்றை செய்யும்போதும் மனிதர்களாய் அவர்கள் மேலோங்கி நிற்கிறார்கள்.
இந்த கோவிட் காலத்தில் நாம் வியந்து பாராட்ட வெண்டிய நிலைக்கு உயர்ந்திருப்பவர்கள் சுகாதாரப் பணியாளர்கள்.
தமிழகத்தில் (Tamil Nadu) ஒருவர் இந்த சுகாதார ஊழியர்களுக்கு ஒரு மிக அற்புதமான பிரதி உபகாரத்தை செய்து, மற்றவர்களுக்கு ஒரு முன் உதாரணத்தை அமைத்துள்ளார். அவர், 100 சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா 5 கிலோ எடையுள்ள நூறு மூட்டை அரிசியை நன்கொடையாக அளித்துள்ளார்.
சென்னையில் (Chennai) உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் COVID-19 தொற்றிலிருந்து அவரது வயதான பெற்றோர் குணமடைந்ததை அடுத்து இந்த நபர் இந்த வகையில் தன் நன்றியை தெரிவித்தார். நோயின் தீவிரத்தினால் அவர்கள் ஐ.சி.யுவிலும் இருந்தனர்.
மருத்துவமனையின் டீன் டாக்டர். ஈ தெரானிராஜன், பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், அந்த நபரின் பெற்றோர், 70 வயதுக்கு மேற்பட்டவர்கள், கடுமையான மன உளைச்சலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்றார். "அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் சுமார் எட்டு நாட்கள் கோவிட் ஐ.சி.யுவில் இருந்தனர்," என்று அவர் தெரிவித்தார். நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனும் ஏற்றப்பட வேண்டி இருந்தது என்று டீன் கூறினார்.
அவரது பெற்றோர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவமனையின் துப்புரவு மற்றும் சுகாதாரத்தை கவனித்துக்கொள்ளும் மருத்துவமனையின் தொழிலாளர்களுக்கு அரிசி பைகளை நன்கொடையாக வழங்க அவர்களின் மகன் முன்வந்தார்.
"மருத்துவமனையில் உள்ள மற்ற நோயாளிகளுக்கும் மேலும் நன்கொடை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்," என்று டீன் மேலும் கூறினார்.
தனது பெயரை வெளிக்காட்டிக் கொள்ளாத அந்த தமிழர், இந்த வழியில் சுகாதாரப் பணியாளர்களை (Healthcare Workers) கௌரவித்து ஒரு முன்மாதிரியை முன்வைத்துள்ளார்.
இதுபோன்ற பல செயல்களை நாம் உலகளவில் கோவிட்-19 (COVID-19) காலத்தில் கண்டு வருகிறோம்.
ALSO READ: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்: காரில் உலா வந்த கர்ணப் பிரபு!!
பனாமாவில், மத்திய அமெரிக்க நாட்டில் வைரஸ் தடுப்பு கருவிகளுக்கான பணத்தை திரட்டுவதற்காக, 22 கலைஞர்கள், முன்னணி சுகாதார ஊழியர்களின் ஆய்வக கோட்டுகளை ஏலத்திற்கு தயாராகும் அளவு நேர்த்தி படைத்த கலைப்படைப்புகளாக மாற்றினர்.
அநாமதேய தெருக் கலைஞரான பாங்க்ஸி தனது கலைப்படைப்புகளை இங்கிலாந்து மருத்துவமனையில் ஒரு குறிப்புடன் விட்டுச்சென்றார். "நீங்கள் செய்கிற அனைத்திற்கும் நன்றி. இது கருப்பு மற்றும் வெள்ளை நிறமாக இருந்தாலும் கூட, இந்த இடத்தை சிறிது பிரகாசமாக்குகிறது என்று நம்புகிறேன்." என்று அவர் எழுதியுள்ளார். அவரது ஓவியம் 5 மில்லியன் யூரோ என்ற ஆரம்ப விலையுடன் ஏலத்தில் வைக்கப்படவுள்ளது. இந்த தொகை கொரோனா (Corona) நன்கொடைக்குச் செல்லும்.
முன்னதாக, தொற்றுநோய்களின் தொடக்கத்தில், மகாராஷ்டிராவின் (Maharashtra) வசாயைச் சேர்ந்த எரின் மற்றும் மெர்லின் ஆகியோர் தங்கள் திருமணச் செலவுகளைக் குறைத்து, அந்த பணத்தில், தலையணைகள், போர்வைகள் மற்றும் 50 படுக்கைகளையும் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு நன்கொடையாக வழங்கினர்.
ALSO READ: மனிதன் என்பவன் தெய்வமாகலாம்: கொரோனா காலத்து கொடை வள்ளல்கள்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR