மின்னல் வேகத்தில் ஓடும் மான்; புல்லட் வேகத்தில் துரத்தும் சிறுத்தை....!!

காட்டில்  இரையாக்க துடிக்கும் விலங்குகள், தப்பிக்க நினைக்கும் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் வாழ்வா சாவா போரட்டங்கள் மிகவும் திகிலூட்டக் கூடியவை என்றால் மிகையில்லை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 4, 2022, 06:21 PM IST
மின்னல் வேகத்தில் ஓடும் மான்; புல்லட் வேகத்தில் துரத்தும் சிறுத்தை....!! title=

காட்டில்  இரையாக்க துடிக்கும் விலங்குகள், தப்பிக்க நினைக்கும் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் வாழ்வா சாவா போரட்டங்கள் மிகவும் திகிலூட்டக் கூடியவை என்றால் மிகையில்லை

காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் தினமும் அதிக அளவில் பகிரப்படுகின்றன. இந்த வீடியோக்களை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவை மிகவும் எளிதில் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோக்களில் சில சமயங்களில் விலங்குகள் ஒன்றையொன்று தாக்குவதைக் காணலாம், சில சமயங்களில் ஒன்றுக்கொன்று அன்பு செலுத்தும் அரிய வீடியோக்களும்  காணப்படுகின்றன. 

இப்போது, சிறுத்தைக்கு மானுக்கு இடையிலான வாழ்வா சாவா போராட்டம் தொடர்பான ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் சிறுத்தை வேட்டையாடும் நோக்கத்துடன் மானை புல்லட் வேகத்தில் துரத்துகிறது. அதனிடம் இருந்து தப்பிக்க மானும் மின்னல் வேகத்தில் ஓடுகிறது. 

மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!

காட்டு விலங்குகள் தொடர்பான வைரலாகி  வரும் இந்த வீடியோவில், காட்டில் ஒரு மானின் பின்னால் சிறுத்தை எப்படி துரத்துகிறது என்பதைக் காணலாம். உயிரைக் காப்பாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு புயல் வேகத்தில் ஓடுகிறது. சிறுத்தையும் மானைப் பின்தொடர்ந்து அதிவேகமாக ஓடுகிறது. நீண்ட நேரம், காட்டில் இரண்டுக்கும் இடையில் நடந்த போராட்டத்தில், இறுதியில், சிறுத்தை மானை பிடித்து விடுகிறது.

வீடியோவை இங்கே காணலாம்: 

வைரலான இந்த வீடியோ wonderdixe என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News