பிரியாணிக்காக பறந்து வந்த பூனைகளுக்கு காத்திருந்த செக் - வைரல் வீடியோ

Cats vs Biryani -Viral Vieeo: பிரியாணி சாப்பிட வந்த பூனைகளை உரிமையாளர் ஏமாற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 23, 2022, 04:06 PM IST
பிரியாணிக்காக பறந்து வந்த பூனைகளுக்கு காத்திருந்த செக் - வைரல் வீடியோ title=

பிரியாணி யாருக்கு தான் பிடிக்காது. கிடைத்தால்போதும் என்று வெளுத்துக் கட்டுவதற்கு தயார் நிலையில் கோடிக்கணக்கானோர் இருக்கிறார்கள். பக்கத்து வீட்டில் பிரியாணி சமைத்தாலே நாவில் எச்சில் ஊறும். எங்கடா... கொஞ்சம் பிரியமா கொண்டு வந்து கொடுத்துவிடமாட்டார்களா? என ஏங்கிவிடுவோம். அப்படி, பிரியாணி மீது இருக்கும் பித்தை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. நாவில் சுவைத்துண்டு, அந்த டேஸ்டை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் தனி சுகம். 

மேலும் படிக்க | பகீர் சம்பவம்; மணமகளின் செயலால் மயங்கிய விழுந்த மணமகன்: வைரல் வீடியோ

சொந்த வீட்டில் இன்னும் சமைத்தால் கால் தரையில் நிற்காது. வாயும், மூக்கும் பிரியாணி பாத்திரத்தின் மீதே குவிந்திருக்கும். நமக்கே இப்படி பிரியாணி மீது ஆசை இருக்கும்போது பூனை உள்ளிட்ட விலங்குகளுக்கு இருக்காத என்ன?. வீட்டில் கறி சமைத்துவிட்டால் போதும் அன்றைய நாள் முழுவதும் வீட்டை விட்டு நகரவே நகரமாட்டாரகள். காலையில் கறி வீட்டுக்கு வந்ததுமே, வாசனையை மோப்பம் பிடித்துவிடும் பூனைகள், பாத்திரத்தை மட்டுமே சுற்றிக் கொண்டிருக்கும். அந்த பூனைகளை ஏமாற்றினால், அவைகளுக்கு எவ்வளவு கோபம் வரும் என யோசித்து பாருங்கள்.

இங்கு வைரலாகியிருக்கும் வீடியோவில் உரிமையாளர் இரண்டு பூனைகளையும் அப்படி தான் ஏமாற்றிவிடுகிறார். வீடு முழுவதும் பிரியாணி வாசம் வெளுத்து வாங்கும்போது, இரண்டு பூனைகளையும் வீட்டை விட்டு வெளியே அடைத்துவிடுகிறார் அந்தப் பெண். அந்த பூனைகளுக்காக சிறிய தட்டில் போட்டுவைத்து கதவுக்கு அருகில் வைக்கும் அவர், பூனைகள் இரண்டும் வெளியே காத்திருப்பதையும் கண்டுகொள்கிறார். பின்னர் வேகமாக கதவை திறந்துவிட்டுவிட்டு பிரியாணி தட்டை எடுத்துக் கொள்கிறார். கதவு திறந்ததும் கணப்பொழுதில் பிரியாணிக்காக ஓடி வரும் பூனைகள், அங்கு பிரியாணி இல்லை என்பதைக் கண்டதையும் முகத்தை வாட்டத்துடன் வைத்துக் கொள்கின்றன. இது காண்போருக்கு நகைப்பை மட்டுமல்ல, பூனையின் பீலிங்ஸை புரிந்து கொள்ளவும் உதவுகிறது. 

மேலும் படிக்க | உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட - வைரலாகும் நாய்க்குட்டியின் டான்ஸ் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News