‘ஏய்... அடங்க மாட்டீங்களா’: அடித்துக்கொள்ளும் எலியும் பூனையும், பிடித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!!

Cat Mouse Fight Video: பூனை எலியை ஓங்கி அறைகிறது. ஆனால், எலி பயந்து ஓடவில்லை. எலியின் சுவாரசியமான பதிலடியை இந்த வீடியோவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 15, 2023, 03:36 PM IST
  • எலிக்கும் பூனைக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே.
  • இது தொடர்பான பல வீடியோக்களையும் நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம்.
  • இதே போன்ற காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது.
‘ஏய்... அடங்க மாட்டீங்களா’: அடித்துக்கொள்ளும் எலியும் பூனையும், பிடித்து பார்க்கும் நெட்டிசன்ஸ்!! title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

எலிக்கும் பூனைக்கும் உள்ள பகை அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான பல வீடியோக்களையும் நாம் சமூக ஊடகங்களில் பார்த்துள்ளோம். எலி பூனையைப் பார்த்தவுடன் ஓட்டமெடுப்பதும், பூனை அதை பிடித்து பலியாக்க விரும்புவதும் எப்போதும் நடப்பதே. இவை இரண்டையும் வைத்து பல கார்ட்டூன்களும் எடுக்கப்பட்டுள்ளன. இதில் டாம் அண்ட் ஜெர்ரிக்கு எப்போதும் முதலிடம்தான். நிஜ வாழ்வில் பூனை எளிதாக எலியை பிடித்துவிடலாம், ஆனால், இந்த கார்டூனில் எலி பூனைக்கு எப்படியாவது டிமிக்கி கொடுத்து விடுகிறது. 

இதே போன்ற காட்சி கொண்ட ஒரு வீடியோ தற்போது வைரல் ஆகி வருகின்றது. பூனை ஒன்று எலியை அடிக்க, அதற்கு எலி எப்படி பதிலடி கொடுக்கிறது என்பதை இதில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | முதலை போட்ட ஸ்கெட்சில் தப்பித்த மான்; வைரல் வீடியோ 

பூனை மற்றும் எலியின் சண்டை

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையோரத்தில் இருந்த எலி பூனையின் கண்களில் சிக்கியதை காணமுடிகிறது. எலிக்கு அருகில் சென்ற பூனை அதை பலமாக அறைகிறது. ஆனால், இதனால் அடங்கிப்போகாத எலி அதற்கு பதிலடி கொடுக்கிறது. எலி குதித்து பூனையின் வாயைக் கீறுகிறது. சிறிது நேரம் கழித்து இரண்டும் தங்கள் வழியே சென்றுவிடுகின்றன. எலியும் பூனையும் இருக்கும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பூனை எலி அலப்பறை வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சியை நீங்கள் கார்ட்டூன்களில் மட்டுமே பார்த்திருக்க முடியும். நிஜ வாழ்வில் இப்படி ஒரு காட்சியை காண்பது மிக வேடிக்கையாக உள்ளது. இந்த வீடியோ ranthambore.vibes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வகையான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Elephant Video: அய்யோ பாவம் எப்படி காப்பாத்தப் போறாங்க? பகீரென திகில் எழுப்பும் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News