சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு! வைரலாகும் மோதல்

Animal Video: சிங்கக் கூட்டத்தையே சிங்கிளாக சிதறடிக்கும் காட்டெருமையின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 19, 2022, 01:42 PM IST
  • காட்டெருமையின் கொடூர தாக்குதல் வைரல்
  • துள்ளி குதித்து சிங்கத்தையே அட்டாக் செய்யும் காட்டெருமையின் வைரல் வீடியோ!
  • உக்ரமாய் தாக்கும் காட்டெருமையின் வீரியமான கோப வீடியோ
சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு! வைரலாகும் மோதல் title=

வைரல் வீடியோ:  சமூக ஊடகங்கள் நம் வாழ்க்கையில் பல வசதிகளை சுலபமாக்கியிருக்கிறது, அதில் இருந்து நாட்டு நடப்பு, செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். அதிலும் இணையத்தில் நாம் பார்க்கும் பல வித வீடியோக்களில் சில பரவசப்படுத்தினால், சில பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் தினமும் பகிரப்படுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்கள் அனைவராலும் பார்த்து விரும்பி ரசிக்கப்படுகின்றன. மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களை பார்த்து பரவசப்படுவதற்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இயல்பான வாழ்க்கையில் நாம் காண முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்க்க முடியாத விலங்குகளின் பல அரிய தருணங்களை இவற்றில் கண்டு மகிழ்கிறோம். இருந்தாலும், அன்றாடம் நடைபெறும் வழக்கமான செயல்களில் குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் இருக்கும் வீடியோக்களும் வைரலாகின்றன.

மேலும் படிக்க | பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

ஆனால் காட்டு விலங்குகள் வீடியோ என்றால் அவை பெரும்பாலும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகிறது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு! வைரலாகும் மோதல் வீடியோ பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. சிங்கத்தின் சீற்றத்தின் முன் யாரும் நிற்கமுடியாது என்று சொன்னாலும், காட்டெருமை கம்பீரமாக வந்து துவம்சம் செய்யும்போது அங்கே இருக்கும் பல சிங்கங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ பலராலும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.

கூட்டமா இருந்தா என்ன? நான் சிங்கிள் ஆளே போதும் என சிங்கங்களுக்கே சவால் விடும் காட்டு விலங்கு காட்டெருமையைத் தவிர வேறு எந்த விலங்காகவும் இருக்க முடியாது. இது உண்மை என்பதை வீடியோவை பார்த்தால் நீங்களே புரிந்துக் கொள்வீர்கள்.

சிங்கத்தை விட காட்டெருமைக்கு பலம் அதிகம் எனபதை உணர்த்தும் இந்த வீடியோ  வெளியாகி வைரலாக பகிரப்படுகிறது. ஆனால் தனியாக இருந்தால் விலங்குகளுக்கு வலிமை அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது. இவ்வளவு சிங்கங்கள் இருந்தாலும் ஒற்றை காட்டெருமை அவற்றை பந்தாடுவது அதையே உணர்த்துகிறது.

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

விலங்குகளின் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் ஓடிச் சென்று தாகும் காட்டெருமையின் பலம் மலைப்பைக் கொடுக்கிறது. இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சக்கைப்போடு போடுகின்றன.  

மேலும் படிக்க | துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News