ஆசையாய் வந்த மணமகனை பளார் என அறைந்த மணமகள்: காரணம் இதுதான், வைரல் வீடியோ

Shocking Wedding Video: சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 19, 2022, 04:55 PM IST
  • மாலை போட ஆசையாய் வந்தார் மணமகன்.
  • பளார் என அடித்தார் மணமகள்
  • ‘என்னதான் நடக்குது இங்க’: உறவினர்கள் ஷாக்.
ஆசையாய் வந்த மணமகனை பளார் என அறைந்த மணமகள்: காரணம் இதுதான், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

தினமும் திருமணம் தொடர்பான பல்வேறு வகையான வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான திருமண வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. இருப்பினும், காண்பவர்களை அதிர்ச்சியடையச் செய்யும் சில வீடியோக்களும் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சியான வீடியோவில், மாலை மாற்றும் சடங்குக்கு சற்று முன்பு மணப்பெண் மணமகனை மேடையிலேயே அடிப்பதை காண முடிகின்றது. 

மேலும் படிக்க | கியூட்டா ஒரு டாட்டா, இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்த மணப்பெண்: வைரல் வீடியோ 

உத்தரபிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று இந்த சம்பவம் நடந்தது. அங்கு திருமணத்தில் கலந்துகொள்ள நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் வந்திருந்தனர். அத்தனை பேருக்கும் மத்தியில் இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்துள்ளது. 

திருமண மேடையில் மணமகனும், மணமகளும் கைகளில் மாலைகளுடன் நிற்பதை வீடியோவில் காண முடிகின்றது. மணமகன் மணப்பெண்ணுக்கு மாலையை அணிவிக்கிறார். ஆனால்,அப்போது யாரும் எதிர்பாராத நிலையில், மணமகள் அவரை அறைந்துவிட்டு, அதுவும், ஒரு முறை அல்ல, இரண்டு முறை அறைந்துவிட்டு மேடையிலிருந்து வெளியேறிவிடுகிறார். இதைப் பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சியில் உரைந்தனர். வீடியோ-வை பார்த்தால் மணமகளுக்கு மணமகனை பிடிக்கவில்லை என்பது தெரிகிறது. எனினும் இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை. 

மணமகள் மணமகனை பளார் என அடித்த வீடியோவை இங்கே காணலாம்: 

இந்த வீடியோ @Benarasiyaa என்ற ட்விட்டர் கணகில் பகிரப்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின் படி, மணமகள் ஏதோ கோவத்தில் இருந்தார் என தெரியவந்துள்ளது. அவர் மணமகனை அடித்ததையடுத்து அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர் போலீசார் மற்றும் குடும்பத்தினர் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் சிறிது நேரம் கழித்து திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், வீடியோ வைரலாகி, சமூக ஊடக பயனர்களிடமிருந்து பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உண்ணன. சிலர் இதைப் பார்த்து சிரித்தாலும், பலர்  மணமகள் மணமகனை அறைந்திருக்கக் கூடாது என்றே கூறுகின்றனர். 

ஒரு பயனர், ‘திருமணம் பிடிக்கவில்லை என்றால், கட்டாயத் திருமணம் செய்ததற்காக அவர் பெற்றோரை அறைய வேண்டும், அந்த மணமகன் என்ன செய்வான்?’ என கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பயனர், ‘அந்த பெண் செய்தது பெரிய தவறு. அவர் மீது மான நஷ்ட வழக்கே போடலாம்’ என கருத்து தெரிவித்துள்ளார். 

இதற்கிடையில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதற்கு ஏராளமான லைக்குகளும், வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. 

மேலும் படிக்க | Viral: இதுதான் என்னோட கடைசி ட்ரிப்; உணர்ச்சிவசப்பட்ட விமானப்பெண் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News