Viral Video: காட்டு ராஜாவுக்கு வந்த சோதனை... இலை தழைகளை சாப்பிடும் சிங்கம்..!!

Lion Video: காடுகளில் வாழ்க்கையே உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டம். வல்லவன் வாழ்வான் என்ற விதி காட்டு வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 21, 2023, 06:13 PM IST
  • காட்டு விலங்குகளே அஞ்சும் சிங்கம் இலைகளை உண்ணும் வீடியோ.
  • வித்தியாசமான சிங்கம் வீடியோ ஒன்று வைரலாகியது.
  • காட்டின் ராஜாவான சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீர்கள்.
Viral Video: காட்டு ராஜாவுக்கு வந்த சோதனை... இலை தழைகளை சாப்பிடும் சிங்கம்..!! title=

காடுகளில் வாழ்க்கையே உயிரை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டம். வல்லவன் வாழ்வான் என்ற விதி காட்டு வாழ்க்கைக்கு மிகவும் பொருந்தும். இங்கு சக்தி வாய்ந்த விலங்குகள் மற்ற விலங்குகளை வேட்டையாடி தனது பசியை ஆற்றிக் கொள்கிறது. காட்டுக்கு ராஜாவான சிங்கம் மிகவும் ஆபத்தான விலங்கு. அதன் வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தை கருத்தில் கொண்டே, இது காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. சிங்கம் முன்னால் தோன்றினால், காட்டு விலங்குகளே அஞ்சி ஓடும்.  அதன் கர்ஜனை கேட்டால், காடே அதிரும். சிங்கம் அனைத்து விலங்கையும் இரையாக மாற்றும் ஓர் சக்தி வாய்ந்த இனமாகும். ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோ சற்று வித்தியாசமானது, வினோதமானது. 

காட்டின் ராஜாவான சிங்கம் வேட்டையாடி பார்த்திருப்பீர்கள். ஆனால், இலை தளைகளை சாப்பிட்டு பார்த்திருக்கிறீர்களா... ஆமாம்... உண்மை தான்... வைரலாகி வரும் சிங்கம் வீடியோவில், சிங்கம் ஒன்று மரத்தின் இலை தழைகளை பொறுமையாக சாப்பிடுவதைக் காணலாம் .

காட்டு விலங்குகளே அஞ்சும் சிங்கம் இலைகளை உண்ணும் வீடியோ:

 

 

சிங்கத்தின் இந்த வீடியோவை ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  அவர் அந்த பதிவில், சிங்கத்தின் உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் போது, அது மூலிகைகலை தேடி சாப்பிடக் கூடும் என்றும், தண்ணீர் சத்து குறைந்து தண்ணீர் கிடைக்காமல் இருக்கும் போதும் அது இவ்வாறு சாப்பிடக் கூடும் என்றும் தெரிவிக்கிறார். இந்த வீடியோ இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ 100க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும், அதிக அளவிலான லைக்குகளையும் பெற்றுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவிற்கு பயனர்களும் பல விதமான கருத்துக்களைபகிர்கின்றனர். 

சில நாட்களுக்கு முன் இதே போன்று வித்தியாசமான சிங்கம் வீடியோ ஒன்று வைரலாகியது. காட்டு ராஜாவான சிங்கத்தின் கர்ஜனையை கேட்டாலே நமக்கெல்லாம் திகில் ஏற்படும். ஆனால், காட்டிற்கு ராஜா ஆனாலும் வீட்டிற்கு அடங்கி தான் ஆக வேண்டும். இணையத்தில் வைரலாகிய வீடியோவில் ஒரு ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் காணப்படுகின்றன. ஆண் சிங்கம் பெண் சிங்கத்தின் அருகில் சென்ற உடன் பெண் சிங்கம் சீறிப் பாய்கிறது.  சிங்கம் பொதுவாக கடித்தல் அல்லது விளையாட்டுத்தனமாக சீண்டுவதன் மூலம் தங்கள் இனச்சேர்க்கை விருப்பத்தை தெரிவிக்க முனைகிறார்கள். இருப்பினும், பெண் சிங்கம் அதற்கான மன நிலையில் இல்லாதபோது, ​​தொந்தரவு செய்வதை விரும்பாமல் இருக்கலாம். இணையத்தில் வைரலாகிய அந்த  வீடியோவில், பெண் சிங்கங்கள் எவ்வளவு ஆக்ரோஷமாக இருக்கும் என்பதைத் தெளிவாகக் காணலாம். கீழ் கண்ட இணைப்பில், அந்த வீடியோவை கண்டு களிக்கலாம்.

மேலும் படிக்க | Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News