பாரதி கேபிள் நிறுவனத்தின் Dish TV ஆனது 'd2h Magic' என்ற உள்ளடக்க ஸ்ட்ரீமிங் தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது!
இந்த d2h Magic-ஆனது பயனர்கள் டிஜிட்டல் வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் OTT பயன்பாடுகளை, தற்போதைய d2h செட்-டாப் பெட்டியில் அணுக அனுமதிக்கிறது. அதாவது d2h Magic பயனர்கள் தங்கள் தொலைக்காட்சிகளில் இணையத்தில் கிடைக்கக்கூடிய பரந்த அளவிலான ஆன்லைன் உள்ளடக்கத்தை அணுக அனுமதிக்கிறது.
பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அசல் வலைத் தொடர்கள் மற்றும் பிரபலமான டிஜிட்டல் தளங்களில் கிடைக்கும் வீடியோ உள்ளடக்கம் ஆகியவற்றைப் பார்ப்பதன் நன்மை இந்த d2h Magic அளிகும் என தெரிகிறது. கூடுதலாக, ZEE 5, Watcho, Alt Balaji, Hungama Play போன்ற OTT ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளையும், பல ஆங்கிலம், இந்தி மற்றும் பிற இந்திய மொழி வலை நிகழ்ச்சிகளையும் காணலாம் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது டெல்லி உட்பட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பயனர்கள் d2h Magic சேவையை அணுக இயலும் என அறவிக்கப்பட்டுள்ளது. d2h Magic-னை முதல் மூன்று மாதங்களுக்கு இலவச முன்னோட்ட சலுகையின் கீழ் பயனர்களை அணுக முடியும். பின்னர் அனைத்து ஆன்லைன் உள்ளடக்கங்களையும் மாதத்திற்கு ரூ .25 சந்தா கட்டணத்துடன் பயன்ர்கள் கண்டு ரசிக்கலாம்.
d2h Magic சாதனம் தற்போது ரூ .399 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வீடியோக்களைத் தவிர வேறு பயன்பாடுகளில் கிடைக்கும் இலவச உள்ளடக்கத்தை அணுகுவதற்கான வசதியையும் இந்த சாதனம் வழங்குகிறது, அதாவது பெரிய டிவி திரைகளில் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடுகளைப் பயன்படுத்த முடியும். அதேவேளையில் இந்த சாதனம் உதவியோடு முன்பே பதிவேற்றம் செய்யப்பட்ட பல ஆப்-லைன் வீடியோக்களை அணுக முடியும்.
பயனர்களுக்கு தெரிந்த தகவலைப் பெற, பயனர்கள் தங்களது சமீபத்திய d2h செட்-டாப் பெட்டியை d2h Magic சாதனம் வழியாக கிடைக்கக்கூடிய Wi-Fi அல்லது மொபைல் ஹாட்ஸ்பாட்டுடன் இணைக்க வேண்டும். d2h Magic சாதனம் பின்னர் செட்-டாப் பெட்டியில் உள்ள யூ.எஸ்.பி போர்ட்டுடன் இணைக்கப்பட வேண்டும். இந்தச் சாதனத்தை நீங்கள் இணைத்தவுடன், பயனர்கள் தங்கள் செட்-டாப் பெட்டியிலிருந்து அனைத்து ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் உள்ளடக்கத்தையும் தொலைவிலிருந்து கட்டுப்படுத்த முடியும் மற்றும் பிடித்த அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.