ஒரே நிமிஷம்தான்.. கேக் காலி: வீடியோ பார்த்தா சிரிச்சி சின்னாபின்னமாய்டுவீங்க!!

Best Comedy Video: இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் கண்டிப்பாக சிரிக்காமல் இருக்க முடியாது. பிறந்தநாள் அலப்பறை வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகின்றது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 24, 2023, 12:24 PM IST
  • இந்த வீடியோவை பார்க்கும் யாராலும் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது.
  • அந்த சிறுவனை பார்த்தால் பாவமாக இருந்தாலும், நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
  • பிறந்தநாள் சிறுவனின் கையில் கத்தி மட்டுமே மிச்சம் இருக்கிறது.
ஒரே நிமிஷம்தான்.. கேக் காலி: வீடியோ பார்த்தா சிரிச்சி சின்னாபின்னமாய்டுவீங்க!!   title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. கேளிக்கை வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடக உலகம் வேடிக்கையான வீடியோக்களால் நிரம்பியுள்ளது. தினமும் இது போன்ற பல கேளிக்கை வீடியோக்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள், அவற்றின் கேளிக்கை, அவற்றில் இருக்கும் நகைச்சுவை மற்றும் பிரத்யேகத் தன்மை காரணமாக வெளிவந்த உடனேயே நெட்டிசன்களின் ஆதரவைப் பெற்று விடுகின்றன. இவற்றை வைரலாக்கும் நெட்டிசன்கள் நீண்ட நாட்களுக்கு இவற்றை பார்த்து பார்த்து ரசிக்கிறார்கள். 

தற்போதும் அப்படி ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. இந்த வீடியோ பிறந்தநாள் கொண்டாடும் ஒரு சிறுவனுடைய வீடியோ ஆகும். அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாட அனைத்து விருந்தினர்களையும் அழைத்தார். ஆனால் கேக் வெட்ட வேண்டிய நேரம் வந்தவுடன், அவருக்கு ஏற்பட்ட நிலையை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. தனது பிறாந்தநாளுக்கு ஏன் இவர்களை அழைத்தோம் என கண்டிப்பாக அவர் நினைத்து நினைத்து தன்னையே நொந்துகொண்டிருப்பார். 

கேக் மீது பாய்ந்த விருந்தினர்கள்

சமீபத்தில் வெளியான இந்த வேடிக்கையான வீடியோவில், பிறந்தநாள் கொண்டாடிய சிறுவன் நாற்காலியில் வசதியாக அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. அவருக்கு முன்னால் உள்ள மேஜையில் ஒரு பெரிய கேக் வைக்கப்பட்டுள்ளது. அவரை சுற்றி விருந்தினர்களின் கூட்டம் உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். இவர்கள் அந்த பிறந்தநாள் சிறுவனின் நண்பர்களாக இருக்க வேண்டும். 

பிறந்தநாள் கொண்டாடும் சிறுவன் ஊதி கேக்க்கின் மேல் இருந்த மெழுகுவர்த்தியை அணைத்தவுடன் அந்த அதிர்ச்சிகரமான விஷயம் நடந்தது. எப்போது அவர் மெழுகுவர்த்தியை ஊதி அணைப்பார் என காத்துக்கொண்டு இருந்தது போல, விருந்தினர்கள் கேக்கின் மேல் பாய்ந்தனர். பிறந்தநாள் சிறுவனுக்கு என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. சில நொடிகள்தான்... கேக் காலியானது. அது இருந்த சுவடே அங்கு தெரியவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் கேக் காணாமல் போனது. 

இந்த காட்சியை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது

இந்த வீடியோவை பார்க்கும் யாராலும் தங்கள் சிரிப்பை அடக்க முடியாது. அந்த சிறுவனை பார்த்தால் பாவமாக இருந்தாலும், நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. பிறந்தநாள் சிறுவனின் கையில் கத்தி மட்டுமே மிச்சம் இருக்கிறது. அவர் முன்னால் கேக்கின் ஒரு சிறு துண்டு கூட இல்லை என்பதை வீடியோவில் காண முடிகின்றது. அவர் கேக்கை வெட்டும்வரை கூட யாரும் காத்திருக்கவில்லை. அதற்குள் அனைவரும் அதன் மீது பாய்ந்து அதை தின்றுவிட்டனர். பலர் இந்த வீடியோவை மீண்டும் மீண்டும் பார்த்து சிரித்து வருகின்றனர். கடைசியில் அந்த சிறுவன் பார்க்கும் பார்வை, ‘அடப்பாவிகளா... கொஞ்சம் கூட மிச்சம் வைக்கலயா’ என கேட்பது போலவே உள்ளது. 

மேலும் படிக்க | இது உலக மகா நடிப்புடா சாமி.. தொட்டதும் பயங்கி விழுந்த பாம்பு: வீடியோ வைரல்

அந்த வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@butterfly__mahi)

வீடியோ வைரல் ஆனது 

சிறுவன் தன் பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு முன்பே அதன் மீது பாய்ந்து அதை பறித்து சாப்பிடும் நண்பர்களின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இன்ஸ்டாகிராமில் இது butterfly__mahi என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இது வைரலாகி வருகின்றது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘இது என்ன கொடுமை..’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘பாவம்... பர்த்டே பாய்’ என ஒருவர் அந்த சிறுவன் மீது பரிதாபப்பட்டுள்ளார். ‘கேக் வெட்டவாவது அந்த சிறுவனை விட்டிருக்கலாம்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், ‘இவர்களை பார்த்தால் எனக்கு என் நண்பர்கள் நினைவிற்கு வருகிறார்கள்’ என கூறியுள்ளார்.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிகக் | அட பாவி மனுஷா.. இரக்கமின்றி மயிலின் இறகுகளை பறித்த நபர்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News