நீ எங்க போனாலும் நானும் வருவேன்.. தாயை விடாமல் துரத்தி கொஞ்சும் நாய்க்குட்டி!

நாய்க்குட்டி ஒன்று அதன் தாய் நாயை விடாமல் துரத்தி தனது பாசத்தை பொழியும் காட்சி ஒன்று இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Nov 16, 2022, 10:00 AM IST
  • தாயை கொஞ்சும் குட்டி நாய்.
  • விடமால் துரத்தி விளையாடுகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நீ எங்க போனாலும் நானும் வருவேன்.. தாயை விடாமல் துரத்தி கொஞ்சும் நாய்க்குட்டி! title=

மனிதர்கள் அல்லது விலங்கினங்கள் என எதுவாக இருந்தாலும் சரி ஒவ்வொரு உயிரினமும் அதன் தாயிடம் பாசமாக தான் இருக்கும், அதேபோல தாயும் தன் உயிர்களிடத்தில் மிகுந்த பாசத்தை கொண்டிருக்கும் என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று தான்.  மனிதர்களிடத்தில் இருக்கும் தாய் பாசத்தை காட்டிலும் விலங்குகளிடத்தில் நாம் காணக்கூடிய தாய் பாசம் நமது கல்லான இதயங்களையும் கரைத்துவிடும் அளவிற்கு இருக்கும்.  ஏனென்றால் மனிதர்களிடம் இதுபோன்ற பாசப்பிணைப்பை நாம் அடிக்கடி பார்த்திருப்பதனால் நமக்கு அது பெருசாக தெரியாது, அதுவே விலங்குகளிடம் இதுபோன்ற பாசப்பிணைப்பை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை, அதனால் அதை காணும்போது கொஞ்சம் அரிதாக இருக்கும் அதனாலேயே அதுபோன்ற காட்சிகள் நம்மிடம் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகிறது.

மேலும் படிக்க | Viral Video: ஸ்ப்ப்பா முடியலை... என்ன விடுடா... குட்டி யானையுடன் போராடும் இளைஞர்!

இப்போதும் இணையத்தில் பரவியுள்ள ஒரு வீடியோவில் நாய்க்குட்டி அதன் தாயின் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறது என்பதை நன்கு உணர முடிகிறது, அதிகமாக பாசம் வைத்து ஒருவர் பின்னால் சுற்றுபவர்களை நாய்க்குட்டி போல சுற்றி வருகிறார் என்று கூறுவதுண்டு இந்த வீடியோவை பார்க்கையில் தான் அது எவ்வளவு பொருத்தமானது என்பது தெரிகிறது.  அந்த வீடியோவானது ட்விட்டரில் Animales y bichitos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் வெள்ளை நிறத்தில் ஒரு நாய்குட்டியும், வெள்ளை நிறத்தில் மற்றொரு தாய் நாயும் இருப்பதை காண முடிகிறது.  அந்த நாய்க்குட்டி தனது ஆசை ஆசையாக ஓடிச்சென்று கொஞ்சுகிறது, அந்த தாய் நாய் குட்டி நாயை கண்டுக்காமல் தள்ளிப்போவது நடிக்க நடிக்க இந்த நாய்குட்டியும் ஓடிச்சென்று அதன் தாயை கொஞ்சுகிறது.

 

நாய்க்குட்டியின் நெகிழவைக்கும் இந்த காட்சி இணையத்தில் பல நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.   இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்துள்ளனர், மேலும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகள் குவிந்துள்ளது, பலரும் அன்பை வெளிப்படுத்தும் எமோஜிக்களை கமெண்ட் செக்ஷனில் நிரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | சண்டை வேண்டாம்.. வாடா போய்டலாம்! சமாதானப்புறாவாக மாறி நாய்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News