புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பீஸ்ஸாவின் வீடியோ வெளியானதை அடுத்து இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
விண்வெளியில் விண்வெளி வீரர்கள் பீட்சா சாப்பிடும் வீடியோ வைரலாகிறது சர்வதேச விண்வெளி நிலையத்தின் இந்த வீடியோவைப் பார்த்து இணையமே ஆடிப் போய்விட்டது!
விண்கலத்தில் மிதக்கும் பீட்சாக்களை சாப்பிடும் தாமஸ் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ இது.
Also Read | முதன்முறையாக இந்திய உணவை சாப்பிட்ட நைஜீரியரின் வீடியோ வைரல்
தாமஸ் பெஸ்கெட், ஒரு விண்வெளி வீரர் அவரும் அவரது நண்பர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station) பீச்டாவை அனுபவித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்டார். தற்போது அது வைரலாகி இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அற்புதமான வீடியோவைப் பாருங்கள்:
தாமஸ் தனது நண்பர்களுடன் மிதக்கும் பீட்சாக்களைக் கண்டும், உண்டும் மகிழ்வதைக் காட்டுகிறது.
"நண்பர்களுடன் மிதக்கும் பீட்சா இரவு, பூமியில் சனிக்கிழமை நாளன்று இப்படித்தானே ஜாலியாக இருப்போம்? நல்ல சமையல்காரர் ஒருபோதும் தங்கள் சமைக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதில்லை என்று கூறுகிறார்கள், ஆனால் நான் ஒரு வீடியோவை செய்தேன், அதனால் நீங்கள் நீதிபதியாக முடியும். அன்னாசிப்பழத்தைத் தவிர மற்ற அனைத்தும் இத்தாலியில் கடுமையான குற்றமாகும்".
தாமஸ் வீடியோவை ஆன்லைனில் வெளியிட்டவுடன், அது மிகவும் வைரலாகி, 24 மணித்தில் 724,287 முறை பார்க்கப்பட்டுள்ளது.வீடியோவைப் பார்த்து ரசித்த நெட்டிசன்கள், வேடிக்கையாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். "ஈர்ப்பு, இது பைத்தியம்," என்று ஒரு இன்ஸ்டாகிராம் பயனர் எழுதினார்.
மற்றொருவரோ, "பீட்ஸா ஏன் நகர்கிறது? ஆனால் டாப்பிங்ஸ் மட்டும் நகராமல் பீட்சாவின் மேல் எப்படி இருக்கிறது? இது மர்மமானது” என்று எழுதியுள்ளார்.
READ ALSO | கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து A படங்களை பார்த்த வினோத நபர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR