Pongal 2025: பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையின் போது கரும்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
புத்தாண்டு பிறந்த உடன் வரும் முதல் பண்டிகை பொங்கல் என்பதால் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்பண்டிகை நபது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துடன் இணைந்து இருப்பதால் இதனை தமிழர் திருநாள் என அழைக்கிறோம்.
இப்பண்டிகையில் கரும்பின் முக்கியத்துவத்திற்கு இரண்டு காரணிகள் கூறப்படுகிறது.
ஒன்று, கரும்பு ஓராண்டு வளரக்கூடியது. முதலில் பொறுமையாக வளர்ந்து இறுதியில் இனிப்பை தருகிறது.
அதன்படி இளமையில் கஷ்டப்பட்டால் முதுமையில் இனிமையாக வாழ முடியும் என்பதை கரும்பு காட்டுகிறது.
இரண்டாவது விஷயம், பொங்கல் நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் யானையின் கல் உருவத்திற்கு சிவன் கரும்பு ஊட்டியதாக கூறப்படுகிறது.
இதன் நினைவாக பொங்கல் பண்டிகையின் போது கரும்பு முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது.
அதேபோல், கரும்பு சாப்பிட்ட 15 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்கக்கூடாது என கூறப்படுகிறது.
கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படும் கால்சியம் அதிகமுள்ளது. சுண்ணாம்பும், எச்சலும் இணைந்து வேதி வினையாற்றுகிறது.
அந்நேரத்தில் தண்ணீர் குடித்தால் சூட்டை கிளப்பும். சிறு கொப்புளங்கள் தோன்றி நாக்கு புண்ணாகும் என கூறப்படுகிறது.
எனவே சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடித்தால் பாதிப்பு ஏதும் வராது என சொல்லப்படுகிறது.