Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. நம் வாழ்வில் நாம் பொதுவாக காண முடியாத பல வினோத விஷயங்களை இந்த வீடியோக்களில் நாம் காண்கிறோம்.
இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன.
தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் (Viral Video) ஆகி வருகிறது.
சமீப காலங்களில், சமையல் கலையில் பலருக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. பல வித ஆன்லைன் தளங்கள் மூளம் புதிய உணவு வகைகளை கற்றுக்கொண்டு அவற்றை செய்து பார்த்து மகிழ்கிறார்கள், பிறருக்கு அளித்து திருப்தி அடைகிறார்கள். இதில், வினோதமான உணவு கலவைகளுக்கும் பஞ்சமில்லை.
சொல்லப்போனால், வினோதமான உணவு வகைகள் தான் தற்போதைய டிரெண்டாக உள்ளன. சமூக ஊடகங்களில் (Social Media) வைரலாக வேண்டும் என்ற ஒரே காரணத்தால், பலர் ருசியான பல உணவுகளையும், பல்வேறு கலவைகள் மூலம் கெடுத்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வினோத உணவு வகை பற்றிய வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ALSO READ | பட்டையைக் கிளப்பும் பாட்டியின் டான்ஸ், புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்கள்: வீடியோ வைரல்
இந்த ஃப்யூஷன் உணவுகளில் சில முயற்சிகள் செய்யத் தகுந்தவை என்றாலும், மற்றவை முற்றிலும் தேவை இல்லாதவையாகவே உள்ளன. இவை உணவுப் பிரியர்களின் கோபத்தை அதிகமாக்குகின்றன.
இந்த வகை உணவுகளில் சமீபத்திய சேர்க்கை, ஆப்பிள் பக்கோடா ஆகும். ஆம், இது உண்மைதான்!! நாம் அனைவரும் பக்கோடாவை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதுவும் குளிர்காலங்களில் சுடச் சுட பகோடா கிடைத்தால், யாருக்குதான் கசகும்? ஆனால், ஆப்பிள் கொண்டு பகோடா போடுவதா?
தற்போது வைரல் ஆகி வரும் ஒரு வீடொயோவில், ஒரு ஃபுட் வ்ளாகர் ஆப்பிளை பஜ்ஜி போண்டா செய்யும் மாவில் தோய்த்து எடுத்து, அதை சூடான எண்ணெயில் பொரிக்கிறார். சிறிது நேரம் வறுத்த பிறகு, அவர் அதை வெளியே எடுத்து மென்று, "அருமை" என்று கூறி, பார்வையாளர்களுக்கு ‘தம்ப்ஸ் அப்’ காட்டுகிறார்.
இன்ஸ்டாகிராமில் @whathowtry என்ற பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், வ்ளாகர், ஆப்பிளை இரண்டாக நறுக்கி, பக்கோடா மாவில் தோய்த்து, பின்னர் பொரித்து எடுத்து உண்பதைக் காண முடிகின்றது.
அந்த வினோதமான வீடியோவை இங்கே காணலாம்:
பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 7400 க்கும் மேற்பட்ட லைக்குகளையும், பல வித கமெண்டுகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் (Netizens) இரு வகையான எதிர்வினைகளையும் அளித்துள்ளனர். சிலர் இதை புதுமையான முயற்சி என புகழ்ந்துள்ளனர். எனினும் சிலரோ, இப்படிப்பட்ட புதிய கலைவைகளால், பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்ற நல்ல உணவுகளின் ருசியே கெட்டுப்போகிறது என ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும், இந்த ஆப்பிள் பகோடா வீடியோ இணையத்தில் பட்டையைக் கிளப்பிக்கொண்டுதான் இருக்கிறது.
ALSO READ | வால்பாறையில் ஆட்டை வேட்டையாடும் சிறுத்தை புலி Video Viral
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR