இணையத்தை கலக்கும் அனுஷ்கா ஷர்மாவின் எம்பிராய்டரி Video...!

எம்பிராய்டரி கற்றுகொள்ளும் அனுஷ்கா ஷர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...! 

Written by - Devaki J | Last Updated : Aug 25, 2018, 06:06 PM IST
இணையத்தை கலக்கும் அனுஷ்கா ஷர்மாவின் எம்பிராய்டரி Video...!  title=

எம்பிராய்டரி கற்றுகொள்ளும் அனுஷ்கா ஷர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது...! 

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் படமான 'சுய் தாகா' படத்தில் நடிகர் வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா முக்கியகதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை, இயக்குனர் சரத் கட்டாரியா இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் மணீஷ் சர்மா படத்தினை தயாரித்துள்ளார். 

இப்படத்தின் கதைக்களம், முழுக்கமுழுக்க இளைஞர்கள் தன் திறமைகளை வைத்து யாரையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற கருத்தினை கொண்டது. இந்த படத்தில் வருண் தவான் தையல் காரராகவும் அனுஷ்கா ‌ஷர்மா எம்பிராய்டரி செய்பவராகவும் நடித்துள்ளனர். 

இந்நிலையில், நடிகை அனுஷ்கா ஷர்மா எம்பிராய்டரி கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுட்டுள்ளார். அத்துடன் அவர், நான் எப்போதும் ஒரு சவாலாக இருக்கிறேன். எம்பிராய்டரி கற்றுகொள்வது எனது வாழ்கையின் ஒரு பயணம் என பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது...! 

இதோ அந்த வீடியோ தொகுப்பு கீழே இணைக்கபட்டுள்ளது...! 

 

Trending News