ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள்

நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படும் வண்ணமயமான சின்னஞ்சிறு பறவை தான் கிங்பிஷர் எனும் மீன் கொத்தி. கண்ணிமைக்கும் நேரத்தில், நீருக்கு அடியில் உள்ள மீன்களைப் பிடித்து, கபளீகரம் செய்து விடும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 2, 2024, 07:19 PM IST
  • இணையவாசிகளை வியக்க வைத்த கிங்ஃபிஷரின் மீன் வேட்டை வீடியோ
  • நீருக்குள் ஒரு தோட்டாவை போல பாய்ந்து, மீனை வேட்டையாடுவதை காணலாம்.
  • காணக் கிடைக்காத அரிய காட்சிகளை காண சமூக ஊடக தளங்கள் நமக்கு உதவுகின்றன.
ஆற்று நீரில் கிங்ஃபிஷர் நடத்திய மீன் வேட்டை... வியந்து போன நெட்டிசன்கள் title=

Viral Video of Kingfisher Hunting a Fish: காணக் கிடைக்காத அரிய காட்சிகளை காண சமூக ஊடக தளங்கள் நமக்கு உதவுகின்றன. பல அரிய தகவல்களையும் அரிய நிகழ்வுகளையும் எடுத்துக் கூறும் வகையில் பல வீடியோக்கள், தகவல்கள் பகிரப்படுகின்றன. அந்த வகையில் கிங்பிஷர் எனும் மீன்குத்தி பறவை நடத்திய மின் வேட்டை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நீர் நிலைகளுக்கு அருகில் காணப்படும் வண்ணமயமான சின்னஞ்சிறு பறவை தான் கிங்பிஷர் எனும் மீன் கொத்தி. கண்ணிமைக்கும் நேரத்தில், நீருக்கு அடியில் உள்ள மீன்களைப் பிடித்து, கபளீகரம் செய்து விடும். கழுகுகள் துல்லியமாக வேட்டையாடி பார்த்திருப்போம். ஆனால் மீன்குத்தி பறவையும் சற்றும் சலிக்காமல் தனக்குரிய நீளமான அலகால் மீனை மிகச் சிறப்பாக நீருக்கடியில் வேட்டையாடும்.

இணையவாசிகளை வியக்க வைத்த கிங்ஃபிஷரின் மீன் வேட்டை வீடியோ

 

வைரலாகும் வீடியோவில், மீன் கொத்திப் பறவை, நீருக்குள் ஒரு தோட்டாவை போல பாய்ந்து, மீனை வேட்டையாடுவதை காணலாம். மீன்குத்தி பறவைகள் நீர்நிலைகளின் அருகில் உள்ள மணல் திட்டுகளில், வளைகளைத் தோண்டி, அதில் முட்டையிடும் பழக்கம் கொண்டது. சில சமயங்களில் பொந்துகளிலும் முட்டையிடும். 6 முதல் 10 முட்டை வரை இடும் இந்த மீன்கொத்தி பறவைகள், தீவுகளிலும் கடலோரப் பகுதிகளிலும் அதிகம் காணப்படும்.

சில நாட்களுக்கு முன்னால் கழுகு நடத்திய மீன் வேட்டை மிகவும் வைரல் ஆகியது. வைரலான கழுகு வேட்டை வீடியோவில், தண்ணீருக்குள் சீறிப்பாயும் கழுகு, பெரிய முன் ஒன்றைக் கொட்டிக்கொண்டு, அது உயிருடன் இருக்கும் போதே, நொடியில் அதை வானில் கபளீகரம் செய்யும் வீடியோ மிகவும் வைரலானது. கழுகின் கண் பார்வை திறன் அனைவரும் அறிந்ததே. வெகு தூரத்திலிருந்து இறையை கண்டறிந்து, மிகத் துல்லியமாக வேட்டையாடும் திறன் கொண்டது. வைரலான கழுகு வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

மேலும் படிக்க | நீரில் மீன் வேட்டை... அடுத்த நொடியே நடுவானில் விருந்து... வியக்க வைக்கும் சூப்பர் ஸ்டார் கழுகு

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | சுத்து போட்ட சுறா... நடுக்கடலில் சண்டை போட்ட மீனவர் - திக் திக் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News