கோழியை விரட்டி கடித்து கடிவாங்கிய எலியின் வைரல் வீடியோ

கோழி ஒன்றை விரட்டி விரட்டி கடித்து கடி வாங்கிய எலியின் வீடியோ வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 16, 2022, 02:40 PM IST
கோழியை விரட்டி கடித்து கடிவாங்கிய எலியின் வைரல் வீடியோ title=

கோழியும், எலியும் சண்டை போட்டுக்கொள்வது என்பது அரிதினும் அரிதான ஒன்று. பூனை எலி மோதிக் கொள்வதை அதிகம் கேள்விப்பட்டிருப்போம். பார்த்தும் இருகபோம். ஆனால், நீங்கள் கோழி எலியுடன் சண்டைபோடுவதை பார்த்திருக்கிறீர்களா?. இணையத்தில் இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் எலி வான்டடாக வந்து கோழியை கொத்தி, கடிவாங்கிக் கொள்கிறது. பார்ப்பதற்கு இரண்டின் சேட்டை விளையாட்டும் அழகாக இருக்கிறது.

மேலும் படிக்க | கார் டயரில் மாட்டுக்கொண்ட பாம்பு..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

வைல்டு லென்ஸ் எகோ பவுண்டேஷன் எனும் டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. சுமார் 47 நொடிகள் இருக்கும் இந்த வீடியோவில் எலி பொந்து ஒன்றில் இருந்து வெளியே வருகிறது. அப்போது சேவல் ஒன்று அங்கு நின்று கொண்டிருக்கிறது. இதனைப் பார்த்த எலி, சேட்டையாக மெதுவாக நடந்து பின்னர் அங்கேயே ஓடுகிறது. அமைதியாக கோழி இதனை வேடிக்கை பார்க்கிறது. அப்போது எலி அங்கிருந்து ஓடிச் சென்றிருக்கலாம். ஆனால் அதனை செய்யாமல் கோழியின் அருகிலேயே சென்று அதனை கடிக்கிறது. இரண்டு மூன்று கடிகளை வாங்கிய சேவல் மீண்டும் எலியை பதிலுக்கு கொத்த தொடங்குகிறது.

அவ்வளவு தான்... உடனே எலி ஒரே கடியில் கீழே விழுந்து வலியால் துடிதுடிப்பது போல் நடித்து மயக்கமடைவதுபோல் நடிக்கிறது. கோழி, எலியின் இந்த சேட்டையை நின்று வேடிக்கை பார்க்கிறது. இந்த கியூட்டான வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. டிவிட்டரில் மட்டும் பதிவிடப்பட்ட சிலமணி நேரங்களில் ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது.

மேலும் படிக்க | காதலில் பின்னிப் பிணையும் விஷப் பாம்புகள்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News