அமெரிக்க அரசு ஏலியன் வாகனங்களை வைத்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. வேற்று கிரகவாசிகளின் பறக்கும் தட்டு (unidentified flying objects (UFOs)) தொடர்பான ஆதாரங்களை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அரசிடம் யூ.எஃப்.ஓக்கள் எனப்படும் பறக்கும் தட்டுகள் இருப்பதாக, என்று அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி டேவிட் க்ரூஷ் கூறியதாக, தி டெப்ரீஃப் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கத் தற்காப்புத் துறை ஏஜென்சிக்குள் விவரிக்கப்படாத அசாதாரண நிகழ்வுகளின் (unexplained anomalous phenomena (UAP)) பகுப்பாய்விற்கு தலைமை தாங்கிய டேவிட் க்ரூஷ், அமெரிக்காவிடம் வேற்று கிரகவாசிகள், அதாவது மனிதரல்லாத வம்சாவளியைச் சேர்ந்தவர்களின் பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய வான் மற்றும் விண்வெளி புலனாய்வு மையத்தில் (National Air and Space Intelligence Center (Nasic)), தற்போதைய அமெரிக்க உளவுத்துறை அதிகாரியான ஜொனாதன் கிரே, "வேற்று கிரகத்தின் பொருட்கள்" இருப்பதை உறுதிப்படுத்தினார்.
"US government has possession of "intact and partially intact" alien vehicles": Former intelligence official
Read @ANI Story | https://t.co/DsXohPcQff#DavidGrusch #USA #UFO #Alien pic.twitter.com/klv4dwX0Kv
— ANI Digital (@ani_digital) June 7, 2023
தேசிய வான் மற்றும் விண்வெளி புலனாய்வு மையத்தில் UAP பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்ற உளவுத்துறை அதிகாரியான ஜொனாதன் கிரே, மனிதரல்லாத நுண்ணறிவின் யதார்த்தத்தையும் நிகழ்வின் உலகளாவிய தன்மையையும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது அனைவருக்கும் ஆச்ச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | Aliens: மொபைல் டவர்கள் மூலம் ஏலியன்கள் நம்மை கண்டறியலாம்: ஆய்வு தரும் அதிர்ச்சி
பல தசாப்தங்களாக இராணுவ மற்றும் சிவிலியன் பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கும் புதிருக்கு உலகளாவிய தீர்வின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
"இந்த வகையான மீட்டெடுப்புகள் அமெரிக்காவில் மட்டும் அல்ல. உலக அளவில் நடைபெற்றுள்ளது. இன்னும் வேறு நாடுகள் எதுவும் இது பற்றி எதுவும் பகிர்ந்துக் கொள்ளவில்லை. மனிதர் அல்லாத நுண்ணறிவிலிருந்து பெறப்பட்ட இந்தப் பொருட்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இல்லை என்பதை தொடர்ந்து மறுக்க வேண்டிய அவசியம் இல்லை" என்று கிரே கூறினார்.
அண்மையில் வேற்று கிரகவாசிகள் தொடர்பான நடவடிக்கை அதிகரித்து வருவதும், அவற்றை முன்பைவிட அதிகமான எண்ணிக்கையிலான மக்கள் பார்த்திஹ்ருப்பதும், அதிலும் அவை நம்பகத்தன்மை வாய்ந்த பார்வைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, வேற்று கிரகவாசிகள், அவர்களின் பொருட்கள் குறிப்பாக பறக்கும் தட்டுகள் மீதான விவாதங்கள் அதிகரித்திருக்கும் நிலையில், அமெரிக்க அரசிடம் வேற்று கிரகவாசிகளின் பொருட்கள் இருப்பதாக முன்னாள் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
2021 இல், பென்டகன் UAP பற்றிய ஒரு அறிக்கையை வெளியிட்டது. UAP சந்திப்புகளின் 140 க்கும் மேற்பட்ட விவரிக்கப்படாத நிகழ்வுகளைக் கண்டறிந்தததாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | IQAir: இந்தியாவில் அதிகரிக்கும் காற்று மாசு! கங்கை சமவெளியும் விலக்கல்ல
அமெரிக்க அரசாங்கமும் பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களும் பல தசாப்தங்களாக வேற்று கிரகவாசிகளின் பல பொருட்களின் பகுதிகளையும் சில சமயங்களில் முழு பொருட்களையும் மீட்டெடுத்துள்ளனர் என்று என்று அமெரிக்க உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி டேவிட் க்ரூஷ் தெரிவித்தார்.
1990 களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகத்திற்காக (MoD) UFO களை ஆய்வு செய்த நிக் போப், வேற்றுகிரக பொருட்கள் பற்றிய க்ரூஷ் மற்றும் கிரேயின் வெளிப்படையான பேச்சு கவனத்தில் கொள்ள வேண்டியவை என்று கூறினார்.
க்ரூஷின் கூற்றுக்கள் UFO கள் பற்றிய தகவல்களின் அதிகரிப்பு மற்றும் நம்பிக்கையான வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக பார்க்கப்பட வேண்டும் என்று நிக் போப் கருதுகிறார்.
மேலும் படிக்க | உக்ரைனின் மிகப் பெரிய அணையை தகர்த்த ரஷ்யா... அழிவின் விளிம்பில் உக்ரைன்?
"இது ஒரு பரந்த புதிரின் ஒரு பகுதியாகும். இவை அனைத்தும் உண்மை என்று நான் நினைக்கிறேன், இது ஏலியன்கள் தொடர்பாக இதுவரை நாம் நினைத்துக் கொண்டிருந்ததை விட அதிகமான தகவல்கள்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்க விண்வெளி ஏஜென்சியான நாசா, வேற்று கிரக வாழ்க்கைக்கான நம்பகமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும், UAP கள் வேற்று கிரகம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறியது.
"நாசாவின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, பிரபஞ்சத்தில் வேறு இடங்களில் உள்ள உயிர்களை தேடுவது ஆகும். நாசா சூரிய குடும்பத்தை ஆராய்ந்து வருகிறது, இது பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா என்பது உட்பட அடிப்படை கேள்விகளுக்கு பதிலளிக்க உதவுகிறது," என்று நாசா கூறியது.
மேலும் படிக்க | காற்று மாசுப் பட்டியலில் முன்னேறும் இந்தியா! உங்கள் நகரத்திற்கு என்ன இடம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ