SpaceX விண்கல கழிப்பறையில் கசிவு; டயப்பரை பயன்படுத்திய விண்வெளி வீரர்கள்

ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் அமைக்கபட்ட கழிவறை உடைந்ததன் காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் வழியில்,விண்வெளி வீரர்களுக்கு டயப்பர்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 7, 2021, 03:50 PM IST
SpaceX விண்கல கழிப்பறையில் கசிவு; டயப்பரை பயன்படுத்திய விண்வெளி வீரர்கள் title=

விண்வெளிப் பயணத்திற்குப் பயன்படும்  வாகனம் விண்கலம் (Spacecraft) எனப்படும். விண்கலங்கள் பல்வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களையும் சரக்குகளையும் விண்வெளிக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல், தொலைத் தொடர்பு, புவியியல் ஆய்வு, வானிலை ஆய்வு, கோள்கள் ஆய்வு போன்றவற்றிக்காவும் விண்வெளிக்கு அனுப்பபடுகின்றன.

அந்த வகையில், ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் அமைக்கபட்ட கழிவறை உடைந்ததன் காரணமாக,  ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்கு திரும்பும் வழியில், விண்வெளி வீரர்களுக்கு டயப்பர்களைப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

நாசா (NASA) விண்வெளி வீரர் மேகன் மெக்ஆர்தர்  இது குறித்து கூறுகையில், இதனால் பிரச்சனை ஏற்பட்ட போதிலும், இது சமாளிக்கக்கூடியது தான் என்று விவரித்தார். பூமிக்கு திரும்பும்போது, ​​மெக்ஆர்தர் மற்றும் வேறு மூன்று விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் 20 மணிநேரம் செலவிட வேண்டி இருந்தது.

ALSO READ | விண்வெளியில் துணி குப்பை அதிகமாகி விட்டது, சோப்பு அனுப்ப NASA திட்டம்

நாசா விண்வெளி வீரர் மேகன் மெக்ஆர்தர் பூமியின் சுற்றுப்பாதையில் இருந்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "விண்வெளிப் பயணம்  சவால்கள் நிறைந்தது. எங்கள் பணியில் நாம் சந்திக்கும் பல சாவல்களில் இதுவும் ஒன்று இது. எனவே, நாங்கள் அதைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை” என்றார்.

பூமிக்கு திரும்பும்போது, ​​மெக்ஆர்தர் மற்றும் வேறு மூன்று விண்வெளி வீரர்கள் விண்கலத்தில் 20 மணிநேரம் செலவிட வேண்டும். விண்வெளியில் இருந்த காலத்தில், இந்த விண்வெளி வீரர்கள் கழிவறை பிரச்சனையை சமாளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கழிப்பறை கசிவை சரி செய்ய முற்படும் முன், நிலைமையை ஆராய விண்வெளி (Space)  பயணம் தொடர்பாக வெள்ளிக்கிழமை தொடர்ச்சியாக ஆலோசனை நடத்திய  பிறகு மெக்ஆர்தரையும் அவரது மற்ற குழுவினரையும் பூமிக்கு அழைத்து வர முடிவு செய்தனர். மெக்ஆர்தருடன் திரும்பும் பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்குவெட், கடந்த ஆறு மாதங்கள் தீவிரமாக இருந்ததாகக் கூறினார். 

மோசமான வானிலை மற்றும் ஒரு குழு உறுப்பினர் சம்பந்தப்பட்ட மருத்துவப் பிரச்சினை காரணமாக SpaceX விண்கலம் செலுத்தப்படுவது ஒரு வாரத்திற்கும் மேலாக, தாமதமானது.

ALSO READ | விண்வெளியில் திரைப்பட ஷூட்டிங்; வெற்றிகரமாக திரும்பும் படக் குழு..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News