lifespan: நீங்க 150 வயசு வாழலாம், இது அறிவியல் சொல்லும் உண்மை

ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகல் இறுதியாக கண்டறிந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச வயது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? விஞ்ஞானிகள் இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 31, 2021, 09:40 PM IST
  • நீங்க 150 வயசு வாழலாம்
  • இது அறிவியல் சொல்லும் உண்மை
  • பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் உங்கள் ஆயுளைக் கூட்டும்
lifespan: நீங்க 150 வயசு வாழலாம், இது அறிவியல் சொல்லும் உண்மை  title=

ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் எவ்வளவு என்பதை விஞ்ஞானிகல் இறுதியாக கண்டறிந்துவிட்டனர். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதனின் அதிகபட்ச வயது என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? விஞ்ஞானிகள் இதை அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டனர்.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஜீரோ என்ற பயோடெக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் (researchers at a biotech company based in Singapore called Gero) நடத்திய புதிய ஆய்வில், மனிதர்களின் அதிகபட்ச ஆயுட்காலம் 150 ஆண்டுகள் என்பது தெரிய வந்துள்ளது.

நியூயார்க்கில் உள்ள ரோஸ்வெல் பார்க் புற்றுநோய் மையத்துடன் (Roswell Park Comprehensive Cancer Centre)  இணைந்து, ஜீரோவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவை சேர்ந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட மருத்துவத் தரவுகளை ஆய்வு செய்தனர்.

Also Read | SpaceX அதிக செயற்கைக்கோள்களை செலுத்துவது ஏகபோகமாக மாறக்கூடும்

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி தகவல்களை சேகரித்தும், அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை பெற்று அவற்றை ஆராய்ந்து பார்த்து ஆராய்ச்சியாளர்கள் மனிதனின் அதிகபட்ச ஆயுளை கண்டறிந்தனர். ஒருவரின் உயிரியல் வயது மற்றும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் ஆகிய இரண்டு காரணிகளைப் பொறுத்தே ஆயுட்காலம் முடிவாவதாக விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்தனர்.  .

வாழ்க்கை முறை, நோய்கள், ஒருவரின் உண்மையான வயதுக்கு எதிரான மன அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரியல் வயது கணக்கிடப்படுகிறது. அதேபோல், ஒருவித நோய் அல்லது உடல் ரீதியான அதிர்ச்சி  ஏற்பட்ட பிறகு, ஒருவர் தனது வழக்கமான ஆரோக்கிய வாழ்வுக்கு திரும்புவதற்கான ஒருவரின் திறன், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறன் என்று கருதப்படுகிறது.

மனித ஆயுள் தொடர்பான ஆய்வாளர்களின் இந்த கண்டுபிடிப்புகள் செவ்வாயன்று நேச்சர் (journal Nature) சஞ்சிகையில் வெளியிடப்பட்டன, 120-150 வயதிற்குட்பட்ட மனிதர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் திறனை முற்றிலுமாக இழக்கிறார்கள் என்றும் அந்த சஞ்சிகையில் கூறப்பட்டுள்ளது.  

Also Read | சகுனி கதாநாயகின் ரகசிய திருமணத்திற்கு காரணம் என்ன?

ரோஸ்வெல் பார்க் புற்றுநோய் மையத்தின் (Roswell Park Comprehensive Cancer Centre) துணைத் தலைவர் ஆண்ட்ரி குட்கோ (Andrei Gudkov) வின் கூற்றுப்படி, இந்த ஆய்வு ஒரு “கருத்தியல் முன்னேற்றத்தை” குறிக்கிறது. "வயது தொடர்பான நோய்களைத் தடுப்பது மற்றும் சிகிச்சையளிப்பதற்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும். ஆனால் வயதாவதை தடுக்கும் சிகிச்சைகள் உருவாக்கப்படாவிட்டால், மனிதனின் அதிகபட்ச ஆயுட்காலம் இந்த அளவு இருக்காது".

122 வயது மூதாட்டி ஜீன் கால்மென்ட் 1997 ஆம் ஆண்டு இறந்தார். பிரான்சு நாட்டை சேர்ந்த இவரே பூமியில் அதிக ஆண்டுகள் வாழந்தவராக கருதப்படுகிறார்.  ஜப்பானைச் சேர்ந்த ஜிரோமன் கிமுரா 116 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் 2013 இல் இறந்தார். இவர் உலகில் அதிக காலம் வாழ்ந்தவர்கள், அல்லது அதிக ஆயுசு உலகில் வசித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

மனிதர்கள் 130 வருடத்திற்கு அதிகமாக வாழ்ந்ததற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆனால், ஆய்வுகள் மனிதன் 150 ஆண்டுகள் வரை வாழலாம் என்று சொல்கிறது. சரி, நீங்கள் 150 ஆண்டுகள் வாழ முடியும் என்று நினைக்கிறீர்களா?

Also Read | "மேயாத மான்” பட இயக்குனர் குடும்பத்தில் 14 பேரை மேய்ந்து தீர்த்த கொரோனா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News