NASA: ஆற்றில் இருப்பது மணல் மட்டுமல்ல, தங்கம், பொன், Gold…

பெரு நாட்டின் அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும் என்பது தெரிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 13, 2021, 11:13 PM IST
  • மழைக்காடுகளில் பொன் விளைகிறது
  • தங்க சுரங்கங்கள் மும்முரம்
  • சுயாதீனமாய் சுரங்கம் தோண்டும் தொழிலாளர்கள்
NASA: ஆற்றில் இருப்பது மணல் மட்டுமல்ல, தங்கம், பொன், Gold… title=

புதுடெல்லி: பெரு நாட்டின் அமேசான் நதிகளின் ஆச்சரியம் ஏற்படுத்தும் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. அதில் நதியில் இருப்பது மணலும், நீரும் மட்டுமல்ல, தங்கமும் என்பது தெரிகிறது.

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகம் (National Aeronautics and Space Administration (NASA)), கிழக்கு பெருவில் ஏராளமான தங்கம் இருப்பதாக வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிகவும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station (ISS)) இருந்து, எக்ஸ்பெடிஷன் 64 (Expedition 64) இன் குழு உறுப்பினர் எடுத்த புகைப்படங்கள் இவை. அதில் அமேசான் ஆறுகள் மற்றும் பள்ளங்கள் தெரிகின்றன.

Also Read | Homes On Sale: இத்தாலியில் வெறும் ₹100 க்கு வீடு வாங்க பொன்னான வாய்ப்பு

பொதுவாக விண்வெளி வீரரின் பார்வையில் இருந்து மேக மூட்டம் அல்லது சூரியனின் பளபளப்பான புள்ளியால் அவை மின்னி, பிரதிபலிக்கின்றன. பிரதிபலிப்பதன் எதிரொலியாக இந்த புகைப்படத்தில் அற்புதமாக தெரிகிறது சூரிய ஒளியில் மின்னும் பொன்.

பெருவின் மேட்ரே டி டியோஸ் மாநிலத்தில் இருக்கும் அமேசான் மழைக்காடுகளில் நதியும் குழிகளும் தென்படுகின்றன.

மிகவும் ஈரமான இந்த இடத்தில், நூற்றுக்கணக்கான குழிகள், நீர் நிரப்பப்பட்ட படுகைகளாக காணப்படுகின்றன. சுயாதீன சுரங்கத் தொழிலாளர்களால் இவை தோண்டப்பட்டிருக்கலாம், சேற்று மண்ணின் தாவரங்கள் நிறைந்த பகுதிகளால் இந்த பள்ளங்கள் சூழப்பட்டுள்ளன.

Also Read | கனடா பிரதமர் Justin Trudeau அடித்த பல்டி... தற்போது இந்தியாவை புகழக் காரணம் என்ன..!!!

காடாக இருந்து அழிக்கப்பட்ட இந்தப் பகுதிகள், பண்டைய நதிகளைப் போலவே இருக்கின்றன, அவை தங்கம் உட்பட பல்வேறுவிதமான வண்டல்களைக் குவிக்கின்றன.

உலகின் தங்க உற்பத்தியில் ஆறாவது இடத்தில் உள்ளது பெரு நாடு. அதிலும் குறிப்பாக, மாட்ரே டி டியோஸ் (Madre de Dios) உலகிலேயே மிகப்பெரிய சுயாதீன தங்க சுரங்கத் தொழில்களைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாகும்.

சுரங்கத் தொழிலே இப்பகுதியில் காடுகள் அழிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாகும். அதோடு, தங்கத்தை பிரித்தெடுக்கும் செயல்முறையினால், பாதரச மாசுபாடும் அதிகரிக்கிறது.  

Also Read | ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமா?

ஆயினும் பதிவு செய்யப்படாத சுரங்கத் தொழில்களில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இந்தத் தொழிலையே நம்பி இருக்கின்றனர்.  

சிறிய நகரமான நியூவா அரேக்விபா (Nueva Arequipa) தெற்கு இன்டர்சோனிக் நெடுஞ்சாலையில் இருந்தே புலப்படக்கூடியது. 2011 இல் திறக்கப்பட்ட இந்த நெடுஞ்சாலை பிரேசிலுக்கும் பெருவுக்கும் இடையிலான ஒரே சாலை இணைப்பு ஆகும்.

Also Read | Homes On Sale: இத்தாலியில் வெறும் ₹100 க்கு வீடு வாங்க பொன்னான வாய்ப்பு

இது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவைத் தூண்டும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் இது, காடுகளை அழிப்பதற்கு முக்கியமான அடிப்படை காரணமாகிவிட்டது. மக்கள் வந்து போவதற்கு வசதியாக இருப்பதால், இங்கு தங்கத்தை எடுப்பதற்கு பெரிய வழி கிடைத்துவிட்டது.

தம்போபாட்டா தேசிய ரிசர்வ் (Tambopata National Reserve) போன்ற  சில பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதால், அங்கு சுரங்கத் தொழில்கள் நடைபெறுவதில்லை.

ALSO READ | போராட்டம் என்ற பெயரில் பொது இடங்களை நாள்கணக்கில் ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது: SC

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News