கர்நாடக மாநிலத்தின் இக்கலில் இருந்து பங்கல்காட்டிற்கு ஆவனம் இன்றி கொண்டுச் செல்லப்பட்டதாக ரூ.54 லட்சம் ரூபாய், தேர்தல் கமிஷன் சிறப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது கடந்த மார்ச்., 29 ஆம் நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் தலமையிலான காங்கிரஸ் கட்சியும், அவர்களிடன் இருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜகத-வும் பனிப்போர் நடத்தி வருகின்றன. அதே வேலையில் தேர்தலில் வெற்றிப் பெற அறிவிக்கப்பட இருக்கும் வேட்பாளர்களும் தங்கள் தரப்பிற்கு மக்கள் மனதில் இடம்பிடிக்க பல விஷயங்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இக்கலில் இருந்து பங்கல்காட்டிற்கு ஆவனம் இன்றி கொண்டுச் செல்லப்பட்டதாக ரூ.54 லட்சம் ரூபாய், தேர்தல் கமிஷன் சிறப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Rs 54 lakhs being transported from Ilkal to Bagalkot in a car seized by a special team of Election Commission due to the absence of documents #Karnataka pic.twitter.com/qTX177PcGN
— ANI (@ANI) March 31, 2018
கர்நாடகா தேர்தல் 2018...
- வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் - ஏப்ரல் 17
- வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 24
- கர்நாடக தேர்தல் - மே 12, 2018
- வாக்கு எண்ணிக்கை - மே 15, 2018
- 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக மாநிலத்திற்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.