Reliance Jio-ன் சலுகை விற்பனையில் வருகிறது Apple Watch!

4G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கில் முதன்முறையாக Reliance Jio-ஆனது ஆப்பில் நிறுவன கடிகாரத்தினை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது!

Last Updated : Apr 24, 2018, 02:07 PM IST
Reliance Jio-ன் சலுகை விற்பனையில் வருகிறது Apple Watch! title=

4G சேவை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கில் முதன்முறையாக Reliance Jio-ஆனது ஆப்பில் நிறுவன கடிகாரத்தினை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது!

Apple கடிகார சீரிஸின் 3-ஆம் பதிப்பில் வெளிவரும் மொபைல் கடிகாரத்தினை வரும் மே 4-ஆம் தேதி முதல் www.Jio.com, Reliance Digital மற்றும் Jio Store ஆகிய தளங்களில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. அதேவேலையில் நேரடி விற்பனைக்கு வரும் மே 11 முதல் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மொபைல் கடிகாரத்தினை Reliance Jio இணைப்புடன் வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு முன்னதாக கிடைக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பதிவு செய்பவர்களின் வீட்டிற்கே சென்று விநியோகிக்கவும் ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இச்சாதனம் பற்றி தெரிந்தாக வேண்டிய விஷயங்கள்..

  • அறிமுக விற்பனையாக “jioeverywhereconnect” வசதியுடன் விற்பனைக்கு வருகிறது.
  • அணிந்திருப்பவரின் உடல்தகுதி குறித்த தகவல்களை தெரிவிக்கும் வசதி.
  • தண்ணீர் தடுப்பான் வசதி.
  • dual-core processor
  • Siri செயலியுடன் பேச வழிவகுக்கிறது.
  • W2 wireless சிப் பொருத்தப்பட்டுள்ளதால் விரைவான Wifi வசதி.
  • தன்னிட்சையாக மொபைலில் உள்ள பாடல் பட்டியல்களை தானாக அப்டேட் செய்துகொள்ளும் வசதி.

Trending News