மே 9-ல் ரசிகர்கள் முன்னிலையில் காலா பாடல் வெளியீடு!!

ரஜினி நடித்து முடித்துள்ள காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற மே 9-ந் தேதி ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்படுகிறது!

Last Updated : May 5, 2018, 02:30 PM IST
மே 9-ல் ரசிகர்கள் முன்னிலையில் காலா பாடல் வெளியீடு!! title=

கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, இப்படத்தின் இசை வரும் மே 9-ஆம் நாள் வெளியாகும் என நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே என்பது குறித்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தயாரிப்பு தரப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது....!

காலா படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே-9 ஆம் தேதி சென்னையில் உள்ள நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 

இந்த இசைவெளியீட்டு விழாவானது நேரலையாக டுவிட்டர், பேஸ்புக், யூடியூபில் ஒளிபரப்பப்பட உள்ளது. சந்தோஷ் நாராயணன் தனது இசைக்குழுவினருடன் இணைந்து காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளார்.

வுண்டர்பார் ஸ்டுடியோஸ் நிறுவனமும் அதன் டிஜிட்டல் பங்குதாரரான டிவோ நிறுவனமும் இணைந்து காலா படத்தின் பாடல்களையும், இசை நிகழ்ச்சியினை நேரடியாக இணையதளங்களில் வெளியிட உள்ளனர். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இப்படத்தில் வரும் செம்ம வெயிட்டு என்ற பாடலை மட்டும், தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Trending News