புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் சபாநாயகராக பா.ஜ.கவின் எம்.எல்.ஏ ஏம்பலம் செல்வம், இன்று பதவியேற்றுக் கொண்டார். வேறு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பாஜக எம்.எல்.ஏ ஏபோட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் முனுசாமி அறிவித்திருந்தார். என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி (NR Congress-BJP alliance) சார்பில் மணவெளி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏவான செல்வம் தனது வேட்பு மனுவை நேற்று முன்தினம் (2021, ஜூன் 14) தாக்கல் செய்தார்.
நேற்று மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. இதற்கிடையே சபாநாயகர் தேர்தலுக்காக வேறு எம்.எல்.ஏக்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால், எம்.எல்.ஏ ஏம்பலம் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
தான் பதவியேற்றுக் கொண்டது தொடர்பாக தனது டிவிட்டர் பதிவில் புகைப்படங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம்
இன்று 16.06.2021, #புதுச்சேரி மாநில சட்டப்பேரவை சபாநாயகராக பதவி ஏற்றுக்கொண்டேன்.@narendramodi @AmitShah @JPNadda @blsanthosh @arjunrammeghwal @rajeev_mp @BlrNirmal @CTRavi_BJP @LGov_Puducherry @DrTamilisaiGuv @BJP4India @BJP4Puducherry @ShriSamiNathan @ANamassivayam pic.twitter.com/nZQyuFC9jN
— Embalam R. Selvam MLA (@embalamrselvam) June 16, 2021
அண்மையில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டதுமே, முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் சிகிச்சைப் பெற்றார். அதனால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தாமதமாகின.
ALSO READ: Puducherry: நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சபாநாயகர் தெரிவும், அமைச்சரவை பதவியேற்றுக் கொள்வதிலும் தாமதம் ஏற்பட்டது. முதலமைச்சர் ரங்கசாமி சிகிச்சை முடிந்து திரும்பிய பிறகும் கூட, கூட்டணி கட்சிகளிடையே அமைச்சரவை ஒதுக்கீடு தொடர்பாக கருத்து வேறுபாடு இருந்தது. இதனால் இதுவரை சபாநாயகர் தேர்தலும், அமைச்சரவை விரிவாக்கமும் நடைபெறவில்லை.
சிக்கல்கள் தீருவதாக தெரியாததால் கடந்த வாரம் பா.ஜ.க. மேலிட பார்வையாளராக ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. புதுச்சேரி வந்து பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கலந்தாலோசனை மேற்கொண்டார். பிறகு கூட்டணி கட்சிக்கு இடையிலான இழுபறி முடிவுக்கு வந்தது.
அதனையடுத்து இன்று காலை புதுச்சேரியின் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. தென் மாநிலங்களில் பாஜக காலூன்ற பிரம்ம பிரயர்த்தனம் செய்துவருகிறது. அதன் தொடர்ச்சியாக, முதன்முறையாக புதுச்சேரி சபாநாயகர் நாற்காலி பாஜகவுக்கு கிடைத்திருக்கிறது.
Also Read | புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR