வெளியானது பிரபுதேவா-வின் மெர்குரி பாடல் வீடியோ!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் "மெர்குரி" திரைப்படத்தின் மெர்குரி பாடல் வீடியோ வெளியானது. 

Last Updated : Mar 17, 2018, 11:20 AM IST
வெளியானது பிரபுதேவா-வின் மெர்குரி பாடல் வீடியோ! title=

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகும் "மெர்குரி" திரைப்படத்தின் மெர்குரி பாடல் வீடியோ வெளியானது. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் திரைப்படம் "மெர்குரி". சைலன்ட் த்ரில்லராக உருவாயுள்ள இந்த படத்தில், ரம்யா நம்பீசன், ஷனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், அனிஷ் பத்மன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார், சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். 

தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். இதையடுத்து இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இன்று இப்படத்தின் மெர்குரி பாடல் வீடியோ வெளியானது. 

இந்த பாடலானது ரசிகர்களிடையே நல்ல வரவேர்ப்பியா பெற்று வருகிறது. 

 

 

இதையடுத்து, வரும் ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

Trending News