viral! வீட்டு வேலை செய்யும் பிரபல நடிகை: வீடியோ பார்க்க!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களின் மூலம் பிரபலமான நடிகை இஷா தல்வார் வீட்டு வேலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதங்களில் வைரலாக பரவி வருகின்றது!

Last Updated : May 30, 2018, 09:09 PM IST
viral! வீட்டு வேலை செய்யும் பிரபல நடிகை: வீடியோ பார்க்க! title=

இஷா தல்வார் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் தில்லு முள்ளு, மீண்டும் ஒரு காதல் கதை போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். இதையடுத்து, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர், தற்போது தான் வீட்டு வேலை செய்வது போன்ற வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார். அதில், அவர் விறுவிறுக்க வீட்டின் தரையை துணியால் துடைத்து கொண்டிருக்கிறார். 

நடிகைகள் என்றாலே கோடிக்கணக்கில் சம்பளம் மற்றும் சொகுசான வாழ்க்கையுடன் இருப்பவர்களுக்கு மத்தியில் இஷா தல்வார் இந்த செயல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 

இது குறித்து அவர் தற்போது கூறும்போது,,! தன்னுடைய உடலை பிட்டாக வைத்துக்கொள்வதற்காக தான் இப்படி தான் செய்வதாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. 

Trending News