நடிகையில் இருந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை!

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக "நடிகையர் திலகம்" என்ற பெயரில் உருவாகிறது. 

Last Updated : Mar 20, 2018, 07:18 AM IST
நடிகையில் இருந்து டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை! title=

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக "நடிகையர் திலகம்" என்ற பெயரில் உருவாகிறது. 

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கில் உருவாகும் என தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரியாக நடிக்கிறார். அவர் காதல் கணவர் ஜெமினி கணேசனாக, துல்கர் சல்மான் நடிக்கிறார். சமந்தா, ஷாலினி பாண்டே, ராஜேந்திர பிரசாத் உட்பட பலர் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீா்த்தி சுரேஷ் மற்றும் ஜெமினி வேடத்தில் நடிக்கும் துல்கா் சல்மான் புகைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படமானது தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நாயகியாக நடித்தவா் பானுப்பிரியா. திருமணமான பின் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். பின்னர் இவர் டி.வி தொடர்களிலும் நடித்தார். 

சாவித்திரி வாழ்க்கைகை படமாக உருவாகி வரும் நடிகையர் திலகம் படத்திற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகி உள்ளார் பானுப்பிரியா. கீா்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கும் இந்த படத்திற்கு பானுப்பிரியா டப்பிங் பேசும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவர கொண்டா, நாக சைதன்யா, பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, மாளவிகா நாயர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்த படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இந்த படமானது மே மாதம் 9-ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படப்பிடிப்பு குழு அறிவித்துள்ளது.

Trending News