மத்திய பா.ஜ.க ஆட்சியில் குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்!
பிரதமர் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மோடி இன்று பேசியதாவது,,!
இந்த யோஜனா திட்டத்தின் மூலம், மத்திய பா.ஜ.க ஆட்சியில் குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வரும் 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் உழைத்து வருகிறோம்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, வறுமைக்கோட்டுக்கு கீழ் இருப்பவர்களின் பட்டியலை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், நாங்கள், சமூகம், பொருளாதாரம், ஜாதி உள்ளிட்டவற்றை பார்த்து பயனாளிகள் தேர்வு செய்கிறோம். இந்த திட்டத்தில் மூலம், தற்போது அநேகர் பயனடைந்துள்ளனர்.
மேலும், மக்கள் அனைவருக்கும் தரமான மின்சாரம், குடிநீர் வசதியுடன் வீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
During UPA government,beneficiaries were selected through BPL(Below Poverty Line) list. We started doing selection through socio-economic-caste-censux, with the help of which we added those beneficiaries who were left earlier: Prime Minister Narendra Modi #PradhanMantriAwasYojana pic.twitter.com/NZBBoYGK3M
— ANI (@ANI) June 5, 2018
Interacting directly with beneficiaries of various Government schemes is wonderful. One gets to know various aspects of the scheme including some of the areas where we can improve: PM Narendra Modi in an interaction with beneficiaries of the Pradhan Mantri Awas Yojana pic.twitter.com/XDDSz3ek09
— ANI (@ANI) June 5, 2018